News March 10, 2026

வங்கிக் கணக்கில் 2,000.. வந்தாச்சு HAPPY NEWS

image

விவசாயிகளுக்கான PM KISAN திட்டத்தின் 22-வது தவணைத் தொகை ₹2,000, மார்ச் 13-ம் தேதி விடுவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. அசாமில் நடக்கும் அரசு நிகழ்ச்சியில் இந்த நிதியை பிரதமர் மோடி விடுவிக்க உள்ளார். பிப்ரவரி மாதமே இந்த நிதி வரும் என காத்திருந்த விவசாயிகளுக்கு, இப்போது நல்ல செய்தி வந்துள்ளது. முக்கியமாக, உங்கள் வங்கிக் கணக்கு ஆதாருடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

Similar News

News April 11, 2026

‘திமுகவுக்கு ஓட்டு போடுவது தற்கொலைக்கு சமம்’

image

விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட திமுக நிறைவேற்றவில்லை என்று பி.ஆர்.பாண்டியன் சாடியுள்ளார். ரேஷனில் தேங்காய் எண்ணெயை விற்கவும், தென்னங்கள் இறக்க அனுமதிக்க கோரியும் போராடி வருகிறோம். ஆனால், விவசாயிகளுக்கு விரோதமாக திமுக அரசு செயல்படுகிறது. அக்கட்சிக்கு ஓட்டு போட்டால், அது விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதற்கு சமம்; கள் இறக்க அனுமதிப்போருக்கு ஓட்டு போட வேண்டும் என தெரிவித்தார்.

News April 11, 2026

தேர்தலை நிறுத்த வேண்டும்: SC-ல் அவசர வழக்கால் பரபரப்பு!

image

தமிழ்நாட்டில் தேர்தலை நிறுத்தக்கோரி மதுரையை சேர்ந்த KK ரமேஷ் SC-ல் அவசர வழக்கு தொடர்ந்துள்ளார். அரசியல் கட்சிகள் பணம், வாஷிங் மெஷின் போன்ற இலவசங்களை அறிவித்து வாக்கு கேட்பதாகவும், இது தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது என்பதால் தேர்தலை நிறுத்த வேண்டும் எனவும் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். அரசியல் கட்சிகள் அனல் பறக்க பரப்புரை மேற்கொண்டு வரும் நிலையில், இந்த மனு பரபரப்பை கிளப்பியுள்ளது.

News April 11, 2026

ஹீரோயின்கள் என்றாலே கிளாமர் தானா? மிருணாள்

image

ஹீரோயின்கள் தான் கதைக்கு உந்து சக்தியாக இருக்க வேண்டும் என்று மிருணாள் தாக்கூர் கூறியுள்ளார். ‘Decoy’ படத்தின் நிகழ்ச்சியில் பேசிய அவர், ஹீரோயின்கள் பாடல்களுக்கும் கவர்ச்சிக்கும் மட்டுமே உரியவர்கள் அல்ல என்றார். The dirty Picture, Queen போன்ற படங்களால் ​​திரையுலகில் ஒரு மாற்றம் ஏற்பட்டது எனவும், இதுபோன்ற கதைகள் இனி மேலும் வரவேண்டும் என்றும் அவர் பேசியுள்ளார்.

error: Content is protected !!