News February 25, 2026

வங்கிக் கணக்கில் ₹2,000.. உடனே செக் பண்ணுங்க!

image

‘PM கிசான்’ திட்டத்தின் 22-வது தவணை வெளியிடப்படுவதற்கு முன்பு மத்திய அரசு பயனாளிகளின் விவரங்களை மறு சரிபார்ப்பு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதன் மூலம் லட்சக்கணக்கான விவசாயிகளின் பெயர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டதாக தெரிகிறது. எனவே <>pmkisan.gov.in <<>>தளத்திற்கு சென்று, Beneficiary Status-ஐ கிளிக் செய்து செல்போன் எண்ணை பதிவிட்டு Get Data-ஐ கிளிக் செய்தால் உங்கள் விவரம் திரையில் தோன்றும்.

Similar News

News March 2, 2026

சசிகலாவின் காலம் முடிந்துவிட்டது: காங்கிரஸ் MP

image

சசிகலா புதிய கட்சி தொடங்கியுள்ள நிலையில், அவருக்கு எந்தவித மக்கள் ஆதரவும் கிடையாது என கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார். ஒரு காலத்தில் அதிமுகவில் சசிகலாவுக்கு செல்வாக்கு இருந்தது உண்மைதான், ஆனால் தற்போது அவரது காலம் முடிந்துவிட்டது எனவும் தெரிவித்தார். மேலும் சசிகலாவுடன் பயணித்த டிடிவி தினகரன் தற்போது எங்கு இருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும் என்றும் அவர் பேசியுள்ளார்.

News March 2, 2026

SPORTS 360°: இந்திய வீரர் சாம்பியன்

image

*ISL கால்பந்தில் சென்னையின் – ஒடிசா அணிகளுக்கு இடையிலான போட்டி 1-1 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது *உள்ளரங்க குண்டு எறிதலில் 17.09 மீ தூரம் குண்டு எறிந்து புதிய தேசிய சாதனையை கிருஷ்ணா ஜெயசங்கர் படைத்துள்ளார் *சர்வதேச தடகளம் 60மீ தடை தாண்டுதல் சாம்பியன்ஷிப்பில் ஷெகாவத் முதலிடம் பிடித்தார் *இலங்கை அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து சனத் ஜெயசூர்யா ராஜிநாமா

News March 2, 2026

பூர்ணச்சந்திரன் குடும்பத்தை சந்தித்த PM மோடி

image

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றக்கோரி பூர்ணச்சந்திரன் என்பவர் தீக்குளித்தார். இந்நிலையில், NDA மாநாட்டில் அவரது மனைவி இந்துமதி & மகன்களை சந்தித்து PM மோடி நலம் விசாரித்தார். இதுபற்றி X பதிவில் PM மோடி, பூர்ணச்சந்திரனின் உயிரிழப்பானது, திமுக அரசின் கூருணர்வு இல்லாததால் நடந்தது என்றும், அவர்கள் என்ன செய்தாலும் உண்மை வெல்லும், முருகனின் பக்தர்கள் வெல்வார்கள் எனவும் கூறியுள்ளார்.

error: Content is protected !!