News January 28, 2026
வங்கிக் கணக்கில் ₹2,000.. அரசு புதிய அறிவிப்பு

பிப்.1-ல் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், PM KISAN திட்டத்தின் அடுத்த தவணை வரவு வைக்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்தது. இந்நிலையில், வழக்கம்போல் இத்திட்டத்தின் கீழ் 22-வது தவணையாக ₹2,000 பிப்ரவரியில் வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. வேளாண் துறை அதிகாரிகளை அணுகி அடையாள எண்ணை பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. e-KYC அப்டேட்டையும் விவசாயிகள் நிறைவு செய்வது அவசியமாகும்.
Similar News
News February 6, 2026
ஹீமோகுளோபின் அதிகரிக்க இத குடிங்க போதும்!

ஹீமோகுளோபின் ரத்த சிவப்பணுக்களில் உள்ள இரும்புச்சத்து நிறைந்த புரதமாகும். ஹீமோகுளோபின் குறைபாடு ஏற்பட்டால், ரத்த சோகை பிரச்னை ஏற்படலாம். ஆதலால், உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க, டாக்டர்கள் சில எளிய ஜூஸ்களை பரிந்துரைக்கின்றனர். அவற்றை மேலே போட்டோக்களாக கொடுத்துள்ளோம். போட்டோவை வலது பக்கமாக Swipe செய்து பாருங்கள். உங்களின் நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.
News February 6, 2026
BREAKING: வேல்முருகன் விலக திட்டம்.. CM ஸ்டாலின் அதிர்ச்சி

திமுக கூட்டணியிலிருந்து தவாக விலக உள்ளதாக கூறப்படும் நிலையில், கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்ற CM ஸ்டாலினின் நிகழ்ச்சியில் வேல்முருகன் ஆப்சென்ட் ஆனார். அண்மைக் காலமாக கூட்டணி நிலைப்பாட்டில் தனது கருத்தை மாற்றிய வேல்முருகன், கடந்த 3 நாள்களாக மா.செ.,க்களுடன் தீவிர ஆலோசனை நடத்தியுள்ளார். அதில், பெரும்பாலானோர் திமுக கூட்டணியை விரும்பவில்லையாம். இதனிடையே, <<19063026>>தவாகவை கூட்டணியில் சேர்க்க அதிமுக<<>> அணுகுகிறது.
News February 6, 2026
BREAKING: இந்தியா பேட்டிங்!

ENG-க்கு எதிரான U19 ODI WC பைனலில், டாஸ் வென்ற IND பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இத்தொடரில் இவ்விரு அணிகளும் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளதால், பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. IND: ஆரோன் ஜார்ஜ், சூர்யவன்ஷி, ஆயுஷ் மாத்ரே, விஹான் மல்கோத்ரா, வேதாந்த் திரிவேதி, அபிக்யான் குண்டு, அம்பரீஷ், கனிஷ்க் சவுஹான், கிலான் பட்டேல், ஹெனில் பட்டேல், தீபேஷ். 6-வது முறையாக இந்தியா சாம்பியன் ஆகுமா?


