News January 23, 2026
வங்கிக் கணக்கில் ₹2,000.. அரசின் முக்கிய அப்டேட்

PM KISAN திட்டத்தின் அடுத்த தவணையை (₹2,000) பிப்ரவரியில் வழங்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இதில் பயனடையும் விவசாயிகள் உயிரிழந்தால், வாரிசுகளுக்கு தொகை கிடைக்குமா என கேள்வி எழுந்துள்ளது. நிச்சயமாக கிடைக்கும். விவசாயி இறந்துவிட்டதை வேளாண் துறைக்கு தெரியப்படுத்தி, வாரிசுதாரர் என்பதற்கான சான்றை அளித்தால் இந்த திட்டத்தில் இணையலாம். இறந்தவர் பெயர் நீக்கப்பட்டு வாரிசுகளுக்கு பணம் கிடைக்கும்.
Similar News
News January 29, 2026
வீட்டில் லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்க..

சிறிய மண் கலசம், உப்பு, சர்க்கரை, பச்சரிசி, புளி, பருப்பு, நவதானியம், குங்குமப்பூ. கஸ்தூரி, ஜவ்வாது, ஐம்பொன், வெற்றிலை பாக்கு ஆகியவற்றை வியாழக்கிழமை இரவே தயாராக வைத்து கொள்ள வேண்டும். கலசத்திற்கு விபூதி, சந்தனம் குங்குமம் வைக்க வேண்டும். அடுத்த நாள் காலை 6- 7 மணிக்குள் அனைத்து பொருள்களையும் கலசத்தில் போட்டு பூஜை அறையில் மகாலட்சுமி முன் வைத்து மனதார வேண்டிக் கொள்ளுங்கள்.
News January 29, 2026
பிப்.2-ல் விஜய் இதை அறிவிக்கிறாரா?

வரும் பிப்.2-ம் தேதியுடன் தவெக தொடங்கி 2 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இந்நிலையில், பனையூர் தவெக அலுவலகத்தில் விஜய் தலைமையில் 3-ம் ஆண்டு தொடக்க விழா நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்துவருகின்றன. அன்றைய தினம் தேர்தலுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை விஜய் அதிகாரப்பூர்வமாக வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
News January 29, 2026
OPS இதற்குதான் ஏங்குகிறார்: KC பழனிசாமி

OPS-க்கு திமுகவில் அந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்களா என்பது தெரியவில்லை என KC பழனிசாமி கூறியுள்ளார். உழைத்து மேலே வருபவர்கள் தன்னையே நம்புவார்கள்; அதிர்ஷ்டத்தில் வருபவர்கள் தொடர்ந்து அதிர்ஷ்டத்தையே பார்த்துக்கொண்டிருப்பார்கள் என்றார். மேலும், 3 முறை அதிர்ஷ்டத்தில் கிடைத்த முதல்வர் பதவி மீண்டும் கிடைக்காதா என OPS ஏங்குவதாகவும் விமர்சித்துள்ளார்.


