News January 13, 2026

வங்கிக் கணக்கில் பொங்கல் பரிசு ₹3,000

image

புதுச்சேரியில் பொங்கல் பரிசுத்தொகையாக ₹3,000 வழங்கப்படும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பான கோப்புக்கு துணைநிலை ஆளுநர் அனுமதியளித்த நிலையில், இன்று முதலே பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என நிதித்துறை செயலாளர் அறிவித்துள்ளார். பொங்கல் முடிந்தபின் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பண்டிகைக்கு முன்பே தரப்படவுள்ளது பயனாளிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News January 23, 2026

தஞ்சை: அரசுப் பேருந்து மோதி பெண் பலி

image

திருவையாறு யசோதா நகரைச் சேர்ந்த ராஜேந்திரன் (65) மற்றும் அவரது மனைவி மகா (62) ஆகியோர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, தஞ்சாவூரிலிருந்து அரியலூர் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து மோதியதில் மகா உயிரிழந்தார். பலத்த காயமடைந்த ராஜேந்திரன் திருவையாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். திருவையாறு காவல் துறையினர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 23, 2026

வங்கிகள் 4 நாள்கள் தொடர் விடுமுறை.. சற்றுமுன் அறிவிப்பு

image

LIC-ல் 100% அந்நிய முதலீட்டை வழங்கிய மத்திய அரசின் முடிவை எதிர்த்து வரும் 27-ம் தேதி வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதால் அன்றைய தினம் வங்கிகள் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே ஜன.24(4-வது சனிக்கிழமை), ஜன.25, ஜன.26(குடியரசு தினம்) ஆகிய தேதிகளில் வங்கிகள் விடுமுறையாகும். 4 நாள்கள் தொடர் விடுமுறை என்பதால் பணப் பரிமாற்றம் பெரும் அளவில் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

News January 23, 2026

மீண்டும் டிரெண்டாகும் #Gobackmodi

image

PM மோடி தென் மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் நிலையில், #Gobackmodi X தளத்தில் டிரெண்டாகி வருகிறது. அவர் தமிழகத்திற்கு வரும்போது திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்கள் இதனை டிரெண்ட் செய்வது வழக்கம். ஆனால், தற்போது கேரளாவில் அரசு, பாஜக நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து LDF, UDF ஆதரவாளர்களும் #Gobackmodi எனப் பதிவிட்டு வருகின்றனர்.

error: Content is protected !!