News January 3, 2026

வங்கதேச வீரரை விடுவித்த KKR

image

BCCI அறிவுறுத்தியதன் அடிப்படையில், வங்கதேச வீரர் <<18750067>>முஸ்தஃபிசுர் ரஹ்மானை<<>> KKR அணி விடுவித்துள்ளது. மாற்று வீரரை எடுத்துக் கொள்ளவும் அந்த அணிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான வன்முறை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ரஹ்மானை KKR ஏலத்தில் எடுத்தது விமர்சனத்திற்கு உள்ளானது. அவரை விடுவிக்க வேண்டும் என இந்து அமைப்புகள் கோரிக்கை விடுத்து வந்தன.

Similar News

News February 11, 2026

அமைச்சர் துரைமுருகன் உடல்நிலை.. MEDICAL REPORT

image

அமைச்சர் துரைமுருகன்(87) நேற்று இரவு திடீரென சென்னை அப்போலோ ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கை வெளியாகியுள்ளது. அதில், ICU-வில் கால் வலிக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், இன்னும் சில நாள்கள் அவர் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. நேற்று இரவே ஹாஸ்பிடலுக்கு <<19106437>>சென்று CM ஸ்டாலின்<<>> துரைமுருகனின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.

News February 11, 2026

தேமுதிக எல்லாம் ஒரு கட்சியா? அமைச்சர் ராஜகண்ணப்பன்

image

ஒரே நேரத்தில் இரு கட்சிகளிடம் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவது நியாயமில்லை என தேமுதிகவை அமைச்சர் ராஜகண்ணப்பன் சீண்டியுள்ளார். விசுவாசம் என்றால் ஒரு பக்கம் மட்டுமே இருக்க வேண்டும் என்ற அவர், விசுவாசத்திற்கு பெயர் போன கட்சி என்றால் திமுகதான் எனவும் கூறியுள்ளார். மேலும், தேமுதிக எல்லாம் ஒரு கட்சியா எனவும், பெரிய கட்சியை பற்றி பேசலாம் என்றும் அவர் வெளிப்படையாக அதிருப்தியை காட்டியுள்ளார்.

News February 11, 2026

CINEMA 360°: மீண்டும் பிரதீப் படத்தில் மமிதா பைஜூ!

image

பிரதீப் தயாரிப்பில், அவரது உதவி இயக்குநர் இயக்கும் படத்தில் மமிதா நடிக்கவுள்ளராம் *‘பார்க்கிங்’ இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் சிம்பு, இணைவதாக அறிவிக்கப்பட்ட படத்தில் தற்போது சிம்புவுக்கு பதிலாக SK நடிக்கலாம் எனப்படுகிறது *அஜித் ₹165 கோடி சம்பளம் கேட்டதால், தெலுங்கு தயாரிப்பாளர் அனில் சுங்கரா தயக்கத்தில் இருக்கிறாராம் *சூர்யாவின் ‘கருப்பு’ படம் ஏப்ரல் 10-ம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது.

error: Content is protected !!