News January 7, 2026

வங்கதேசத்துக்கு ஷாக் கொடுத்த ICC!

image

இந்தியாவில் பாதுகாப்பில்லை என கூறி, தங்கள் அணி பங்கேற்கும் T20 WC போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வங்கதேசம் கோரிக்கை வைத்தது. இதுதொடர்பாக பேச ஜெய்ஷா தலைமையில் ICC கூட்டம் நடைபெற்றது. அதன் முடிவில், வங்கதேச அணி இந்தியா வந்து T20 WC தொடரில் விளையாட வேண்டும். இல்லையெனில், அந்த அணி போட்டிகளுக்கான புள்ளிகளை இழக்கும்; இதனால் தொடரிலிருந்து வெளியேறும் நிலை ஏற்படலாம் என எச்சரித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

Similar News

News January 8, 2026

பொங்கல் பரிசு பணம்.. கடைசி நேரத்தில் கூடுதல் அறிவிப்பு

image

பொங்கல் பரிசுத் தொகை தொடர்பாக கடைசி நேரத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் நந்தகுமார், ரேஷன் கடை ஊழியர்களுக்கு புதிய சர்குலர் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், *பச்சரிசி, சர்க்கரை, முழுக் கரும்பு, ₹3,000, வேட்டி, சேலை ஆகியவற்றை ஒரே தவணையில் விற்பனை முனையக் கருவி(POS) வாயிலாக வழங்க வேண்டும். *பொங்கல் பரிசு விநியோகிக்கும் போது ஆதார் விவரத்தை POS-ல் பதிவு செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

News January 8, 2026

பொங்கல் விடுமுறை: கூடுதல் சிறப்பு ரயில்கள்

image

பொங்கல் விடுமுறையை ஒட்டி, கூடுதல் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி, தாம்பரம் – நெல்லை, செங்கல்பட்டு – நெல்லை, சென்னை சென்ட்ரல் – தூத்துக்குடி, சென்ட்ரல் – போத்தனூர் இடையே இயக்கப்படுகின்றன. இதற்கான முன்பதிவும் தொடங்கி விட்டதால் உடனே IRCTC தளம் (அ) Railone ஆப்பில் டிக்கெட் புக் செய்யுங்கள். சிறப்பு ரயில்கள் பற்றி அறிய மேலே உள்ள போட்டோஸை வலப்பக்கமாக swipe பண்ணுங்க. SHARE IT.

News January 8, 2026

கூட்டணியில் திமுக பங்காளி: மாணிக்கம் தாகூர்

image

சமீபமாக திமுக – காங்., கூட்டணியில் சலசலப்பு நிலவியது. இந்நிலையில், I.N.D.I.A கூட்டணியில் காங்., ஒரு பகுதி, திமுக பங்காளி என மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார். அத்துடன், கூட்டணி கட்சிகள் மாற்றம் குறித்த விவாதம் இருக்காது என்றும் தெரிவித்துள்ளார். இதன்மூலம் உள்கட்சி பூசல் முடிவுக்கு வந்து, திமுகவுடனே கூட்டணி என்ற நிலையை காங்., உறுதிப்படுத்திவிட்டதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

error: Content is protected !!