News January 6, 2026
வங்கதேசத்தில் நடந்தவை தவறானவை..

வங்கதேசத்தில் நடந்த சம்பவங்கள் தவறு என ஹர்பஜன் சிங் விமர்சித்துள்ளார். பல்வேறு சம்பவங்களின் காரணமாக, தங்களது T20 WC போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வங்கதேசம் கோரிக்கை வைத்துள்ளதை குறித்து ICCதான் முடிவெடுக்க வேண்டும் எனவும் அவர் கூறினார். அதே நேரத்தில், அனைவரையும் இந்தியாவிற்கு வரவேற்பதாக குறிப்பிட்ட ஹர்பஜன், வங்கதேச வீரர்கள் வருவதும், தவிர்ப்பதும் அவர்களது விருப்பம் எனவும் கூறினார்.
Similar News
News January 25, 2026
விழுப்புரம்: இளைஞர்களே செம வாய்ப்பு..!

தமிழ்நாட்டை சேர்ந்த 1லட்ச மாணவர்கள் &வேலையில்லாத இளைஞர்களுக்கு மத்திய அரசால் சான்றளிக்கப்பட்ட 100 கணினி மென்பொருள் திறன் படிப்புகள் வழங்கப்படுகிறது. இதற்கு 10,+2 தேர்ச்சி, பொறியியல், பட்டம், முதுகலை, எம்பிஏ, பாலிடெக்னிக் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள்<
News January 25, 2026
ஹிந்தி திணிப்பு எதிர்ப்பு மட்டும் போதாது: அன்புமணி

மொழிப்போர் தியாகிகள் தினத்தை கடைப்பிடிப்பதன் நோக்கம் ஹிந்தி திணிப்பை எதிர்ப்பது மட்டுமல்ல, தமிழை வளர்ப்பதும் தான் என அன்புமணி கூறியுள்ளார். தனது X-ல், தமிழ் கட்டாயப் பயிற்றுமொழி அரசாணை பிறப்பித்து 26 ஆண்டுகள் ஆகியும், இன்றுவரை நடைமுறைக்கு வரவில்லை என தெரிவித்துள்ளார். SC-ல் நிலுவையில் உள்ள இதுகுறித்த வழக்குகளை விரைவாக விசாரணைக்கு கொண்டுவர திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் சாடியுள்ளார்.
News January 25, 2026
இன்று தேசிய சுற்றுலா தினம்!

ஊர் சுற்றிப் பார்க்க யாருக்கு பிடிக்காது! இந்தியாவின் அழகை உலகிற்கு சொல்லும் விழா என இன்றைய நாளை இன்றை குறிப்பிடலாம். ‘அதிதி தேவோ பவ’ என்ற பண்பாட்டை நினைவூட்டும் விதமாகவும், சுற்றுலாவின் மகத்துவத்தை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஜனவரி 25-ல், ‘தேசிய சுற்றுலா தினம்’ கொண்டாடப்படுகிறது. ‘உள்ளடக்கிய வளர்ச்சிக்கான சுற்றுலா’ என்பதே இந்த ஆண்டின் கருப்பொருள். உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம் எது?


