News January 27, 2026

வங்கதேசத்திற்கு மீண்டும் ஷாக் கொடுத்த ICC

image

இந்தியாவில் நடைபெறவுள்ள T20 உலகக்கோப்பையில் இருந்து வங்கதேசத்தை <<18952171>>ICC நீக்கியது<<>>. இந்நிலையில், அந்நாட்டைச் சேர்ந்த பத்திரிகையாளர்களுக்கு ஊடக அங்கீகாரத்தை (T20WC) வழங்கவும் ICC மறுத்துள்ளது. இந்தியாவுக்கு செல்ல விசாவுக்காக 150 பத்திரிகையாளர்கள் வரை விண்ணப்பித்திருந்த நிலையில், யாருக்கும் அனுமதி கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ICC முற்றிலுமாக வங்கதேசத்தை புறக்கணித்ததாக பார்க்கப்படுகிறது.

Similar News

News February 9, 2026

சற்றுமுன்: ஜன நாயகன் ரிலீஸ்.. ஹேப்பி நியூஸ் வந்தது

image

‘ஜன நாயகன்’ படத்தை சென்சார் போர்டு ரிவ்யூ கமிட்டிக்கு தயாரிப்பு நிறுவனம் அனுப்பி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்சார் சான்று விவகாரத்தில் சென்னை ஐகோர்ட்டில் உள்ள வழக்கையும் வாபஸ் பெற தயாரிப்பு KVN நிறுவனம் முடிவு செய்துள்ளதாம். ரிவ்யூ கமிட்டி ஒரு வாரத்திற்குள் படத்தை மறு தணிக்கை செய்து சான்று வழங்கும் பட்சத்தில் பிப்.20-ம் தேதி படத்தை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

News February 9, 2026

தமிழகத்திற்கு 8.5 மடங்கு நிதி: அஸ்வினி வைஷ்ணவ்

image

தமிழகத்திற்கான ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்கக் கோரி PM மோடிக்கு CM <<19081916>>ஸ்டாலின்<<>> கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில், 2014-க்குப் பின் TN-க்கான நிதி 8.5 மடங்குக்கும் மேலாக உயர்ந்து, தற்போது ₹7,611 கோடியாக ஒதுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதிலளித்துள்ளார். தமிழகத்திற்கு விரைவான ரயில்வே உள்கட்டமைப்பு வளர்ச்சியை வழங்க மாநில அரசின் ஆதரவும் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

News February 9, 2026

BREAKING: தமிழக கபடி வீராங்கனை விபத்தில் மரணம்

image

தமிழக கபடி வீராங்கனை தீபிகா விபத்தில் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு சித்தோடு அருகே ஸ்கூட்டரில் சென்றபோது நிலைதடுமாறி விழுந்துள்ளார். அப்போது பின்னால் வந்த கூரியர் வேன் தலை மீது ஏறியதில் சம்பவ இடத்திலேயே தீபிகா உயிரிழந்துள்ளார். தனியார் கல்லூரியில் MCA 2-ம் ஆண்டு படித்துவந்த அவர், தமிழ்நாடு கபடி அணியிலும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியவர். <<-se>>#RIP<<>>

error: Content is protected !!