News December 26, 2025
வங்கதேசத்தின் தலைவிதியை மாற்றும் திட்டம்: தாரிக்

முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள், இந்துக்கள், பெளத்தர்கள் என அனைவருக்கும் வங்கதேசம் சம அளவு சொந்தமானது என BNP செயல் தலைவர் தாரிக் ரஹ்மான் தெரிவித்துள்ளார். 17 ஆண்டுகளுக்கு பிறகு நாடு திரும்பிய அவர் முதலில் ஆற்றிய உரையில், நாட்டில் அமைதியை பேணுவது நமது பொறுப்பு என வலியுறுத்தினார். மக்களுக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும், மக்களின் தலைவிதியை மாற்றுவதற்கான ஒரு திட்டம் தன்னிடம் உள்ளதாகவும் கூறினார்.
Similar News
News December 27, 2025
மதநல்லிணக்கத்தை குலைக்க பஹல்காம் தாக்குதல்: அமித்ஷா

பஹல்காம் தாக்குதல் மதநல்லிணக்கத்தை சீர்குலைப்பதற்காக நடத்தப்பட்டது என அமித்ஷா கூறியுள்ளார். ஆனால், ஆபரேஷன் சிந்தூர் மூலம் நாம் தக்க பதிலடி கொடுத்ததன் மூலம் பாக்.,க்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். மேலும், டெல்லி செங்கோட்டை அருகே நடந்த குண்டுவெடிப்பில் 40 கிலோ வெடிபொருள்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் புதிய தகவலை அமித்ஷா வெளியிட்டுள்ளார்.
News December 27, 2025
கோலிய அவுட்டாக்கிட்டேன்.. விஷால் ஜெய்ஸ்வால்

VHT தொடரில் விராட் கோலியை (டெல்லி), குஜராத் அணியின் விஷால் ஜெய்ஸ்வால் ஸ்டெம்பிங் செய்து அவுட்டாக்கினார். இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்திய கோலியுடன் ஒரே மைதானத்தில் விளையாடியது மட்டுமல்லாமல், அவரின் விக்கெட்டையும் எடுத்தது தான் கற்பனை கூட செய்து பார்க்காத ஒன்று என விஷால் எமோஷனலாக கூறியுள்ளார். இந்த வாய்ப்பை கொடுத்த விளையாட்டுக்கு அவர் நன்றியும் தெரிவித்துள்ளார்.
News December 27, 2025
CM ஸ்டாலினிடம் இப்படி கேட்க முடியுமா? முஃப்தி

செய்தியாளர்களை சந்தித்த J&K Ex CM மெஹபூபா முஃப்தி, காஷ்மீரி மொழியில் பேசினார். அப்போது, உருது மொழியில் பேசுமாறு பத்திரிகையாளர் ஒருவர் வலியுறுத்தினார். இதனால் ஆத்திரமடைந்த முஃப்தி, J&K-வில் எஞ்சியிருப்பது காஷ்மீரி மட்டும்தான், இதையாவது பாதுகாக்க வேண்டும் என்றார். தன்னை வேறு மொழியில் பேச சொல்லும் நீங்கள், தமிழக CM ஸ்டாலினை உருது (அ) ஆங்கிலத்தில் பேச சொல்லி கேட்க முடியுமா என கேள்வி எழுப்பினார்.


