News April 7, 2025
வகுப்பறையில் பெண்ணுடன் தங்கியிருந்த இளைஞர் கைது

லால்குடி அருகே வாளாடி மேல்நிலைப் பள்ளி வகுப்பறை ஒன்றில் நேற்றுமுன் தினம் ஆண், பெண் என 2 பேர் உறங்கிக் கொண்டிருந்தனர். ஆசிரியர்கள் கண்டித்தபோது, அந்த இளைஞர் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இந்நிலையில் லால்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்து, வகுப்பறையில் இருந்த கீழவாளாடியைச் சேர்ந்த நவீன்குமாரை (28) கைது செய்தனர்.
Similar News
News April 9, 2025
திருச்சியில் கார் மோதி 2 பேர் பலி

திருச்சி பஞ்சபூர் பகுதியில் புதிய டைட்டில் பார்க் கட்டுமானப் பணியில் புதுக்கோட்டையைச் சேர்ந்த வெற்றிவேல், மோகன் ஆகியோர் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் இன்று பணி காரணமாக இருவரும் ஒரே டூவிலரில் பஞ்சப்பூர் அருகே வந்து கொண்டிருந்த போது, அவ்வழியே வேகமாக வந்த கார் ஒன்று டூவீலர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
News April 9, 2025
திருச்சியில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி

திருச்சியில் உள்ள தனியார் செஸ் அகாடமி சார்பில் மாவட்ட அளவிலான ஓபன் மற்றும் சிறுவர்களுக்கான செஸ் போட்டி வரும் 20-ம் தேதி நடைபெற உள்ளது. ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் இப்போட்டியில் 7, 9, 11, 15 வயது பிரிவினர் கலந்து கொள்ளலாம். போட்டியில் கலந்து கொள்பவர்கள் வயது சான்றிதழ் உடன் வரவேண்டும். போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு சான்றிதழ்களும் பரிசு கோப்பையும் வழங்கப்பட உள்ளது. SHARE NOW!
News April 9, 2025
திருச்சி மாநகராட்சியில் ரூ.237 கோடி வரி வசூல்

திருச்சி மாநகராட்சி பகுதியில் சொத்துவரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி போன்ற வரி இனங்கள் மூலம் வரவேண்டிய வருவாய் ரூ.357 கோடியில், கடந்த பிப்ரவரி மாதம் இறுதி வரை ரூ.190 கோடி மட்டுமே வசூல் ஆகியிருந்தது. இதையடுத்து நிலுவை தொகையை செலுத்த தவறியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன் மூலம் கடந்த மார்ச் வரை (நிதி ஆண்டு) ரூ.237 கோடி வரி வசூலிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.