News November 8, 2025
லோன் வாங்கியவர்களுக்கு HAPPY NEWS

HDFC வங்கி தனது MCLR வட்டி விகிதத்தை 10 புள்ளிகள் குறைத்துள்ளது. இதற்கு முன் 8.45% முதல் 8.65 சதவீதமாக இருந்த MCLR, தற்போது அது 8.35% – 8.60% ஆக குறைந்துள்ளது. இதன்விளைவாக 1 மாதம், 3 மாதம், 6 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டுகளுக்குள் நீங்கள் செலுத்தவேண்டிய பர்சனல், பிசினஸ் மற்றும் ஹோம் லோன்கள் மீதான வட்டி / EMI சிறிது குறையும். முன்னதாக SBI வங்கியும் தனது MCLR வட்டி விகிதத்தை குறைத்தது. SHARE.
Similar News
News November 8, 2025
தேனி: நிலம் வாங்க அரசு வழங்கும் ரூ.5 லட்சம்

நிலம் இல்லாத பெண்களுக்காவே ‘நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெண்கள் நிலம் வாங்க 50% மானியம் (அ) அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் தமிழக அரசால் வழங்கப்படும். இதற்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விலக்களிக்கப்படுகிறது. விவரங்களுக்கு www.tahdco.com இணையத்தில் பார்க்கலாம் (அ) தேனி மாவட்ட தாட்கோ மேலாளரை அணுகவும். மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.
News November 8, 2025
IND Vs AUS T20 போட்டி: இந்திய அணி பேட்டிங்

IND Vs AUS 5-வது T20 போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. இன்றைய போட்டியில் இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ்(C), அபிஷேக் சர்மா, சுப்மன் கில், ரிங்கு சிங், ஜிதேஷ் சர்மா, வாஷிங்டன் சுந்தர், ஷிவம் துபே, அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், வருண் சக்ரவர்த்தி, பும்ரா ஆகியோர் களமிறங்குகின்றனர். ஏற்கெனவே 2 போட்டிகளில் வென்றுள்ள இந்திய அணி இப்போட்டியில் வென்றால் தொடரை கைப்பற்றும்.
News November 8, 2025
BREAKING: மருத்துவமனைக்கு விரைந்த ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த அண்ணன் சத்யநாராயண ராவுக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டதால், பெங்களூருவில் உள்ள தனியார் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த செய்தியை கேட்டவுடன் பதறிப்போன ரஜினி, ஹாஸ்பிடலுக்கு விரைந்து சென்று அண்ணனிடம் உடல்நலம் குறித்து விசாரித்தார். இதன்பின், அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.


