News November 3, 2025
லோன் வாங்கியவர்களுக்கு ஹேப்பி நியூஸ்

ரெப்போ வட்டி விகிதத்தை குறைக்காமல், வங்கிகள் சிறப்பு அறிவிப்பை வெளியிடாமல் உங்களின் கடன் EMI தொகையை குறைக்க முடியும். அதற்கான அறிவிப்பை RBI வெளியிட்டுள்ளது. அதன்படி, உங்களுக்கு கடன் கிடைக்க உதவும் CIBIL SCORE உயர்ந்தால், நீங்கள் ஏற்கெனவே பெற்றிருக்கும் கடன்களின் EMI தொகையை குறைக்கலாம். இதுவரை EMI தொகையை சரியாக செலுத்தி உங்களின் CIBIL SCORE மேம்பட்டிருந்தால் உடனே வங்கியை அணுகுங்கள். SHARE IT
Similar News
News November 4, 2025
பாத்ரூமில் பல்லி வருகிறதா?

பாத்ரூமில் பல்லியை பார்த்து அருவருப்போ பயமோ ஏற்படலாம். கவலை வேண்டாம். பல்லி வருவதை தடுக்க இதை செய்தால் போதும்: *பூண்டு, வெங்காயத்தை நறுக்கி அதில், கிராம்பு, மிளகு சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். *அதனை வடிகட்டி திரவமாக பிரித்து, அதனுடன் டெட்டால் சேர்த்து, ஸ்ப்ரே பாட்டிலில் நிரப்பிக் கொள்ளவும் *பல்லி அதிகமாக இருக்கும் இடத்தில் இதனை ஸ்ப்ரே செய்தால், பல்லிகள் இனி தலை காட்டாது. SHARE IT.
News November 4, 2025
கோவை சம்பவம்: போலீஸ் என்ன செய்கிறது? பிரேமலதா

கோவை மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை பிரேமலதா விஜயகாந்த் வன்மையாக கண்டித்துள்ளார். விமான நிலையம் போன்ற முக்கியமான இடத்தில் இதுபோன்று நடக்கிறது என்றால் போலீஸ் என்ன செய்கிறது எனவும், CCTV கேமரா அனைத்து இடங்களிலும் செயல்படுகிறதா என்பதை அரசு ஆய்வு செய்யவும் அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், குற்றவாளிகளை உடனே கைது செய்து குண்டர் சட்டத்தில் அடைக்கவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
News November 4, 2025
ராசி பலன்கள் (04.11.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.


