News December 24, 2025

லோன் வட்டி விகிதத்தை குறைத்தது Union Bank

image

ரெப்போ வட்டி விகிதத்தை RBI, 25 அடிப்படை புள்ளிகள் குறைத்தது. இந்நிலையில், Union Bank of India முக்கிய லோன்களின் வட்டி விகிதத்தை குறைத்துள்ளது. இதன்படி, வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் 30 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டு 7.15% வட்டியில் லோன் கிடைக்கும். வாகனக் கடன் 40 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டு 7.50% வட்டியுடனும், தனிநபர் கடன் 160 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டு 8.75%-லும் கிடைக்கும்.

Similar News

News December 28, 2025

இனி கல்யாணத்துக்கும் இன்ஷூரன்ஸ்!

image

இக்காலத்தில் திருமணத்தை நடத்த லட்சம் முதல் கோடிகள் வரை செலவாகும் நிலையில் ஏன் அதற்கு இன்ஷூரன்ஸ் எடுக்கக்கூடாது என்ற பேச்சு எழுந்துள்ளது. அதற்காகவே இந்தியாவில் திருமண இன்ஷூரன்ஸ் விரைவில் அறிமுகமாக உள்ளது. அதன்படி மோசமான வானிலை, திருட்டு, எமர்ஜென்ஸி போன்ற காரணங்களால் திருமணம் நின்றால் இனி நிதி பாதுகாப்பு கிடைக்கும். ₹7,000 – ₹55,000 வரை பிரீமியம் தொகை செலுத்தி இன்ஷூரன்ஸ் பெற முடியும்.

News December 28, 2025

இந்தியாவிற்காக விளையாடிய பாக். வீரருக்கு நேர்ந்த கதி!

image

பஹ்ரைனில் நடந்த தனியார் போட்டியில் இந்திய அணிக்காக விளையாடிய பாக். கபடி வீரர் உபைதுல்லா ராஜ்புத்தை அந்நாட்டு கபடி கூட்டமைப்பு காலவரையின்றி தடை செய்துள்ளது. இதுகுறித்து பேசிய ராஜ்புத், தான் விளையாடப் போவது இந்திய அணி என்பது தனக்கு தெரியாது. இதற்கு முன்பு தனியார் போட்டிகளில், இருநாட்டு வீரர்கள் ஒன்றாக விளையாடியுள்ளனர், ஆனால் ஒருபோதும் நாட்டின் பெயர்களில் விளையாடியதில்லை எனத் தெரிவித்துள்ளார்.

News December 28, 2025

திமுகவுடன் கூட்டணியா? டிடிவி தினகரன் விளக்கம்

image

EPS தலைமையை ஏற்க மாட்டோம் என திட்டவட்டமாக டிடிவி தினகரன் தெரிவித்துவிட்டார். இதனால் அவர் திமுக பக்கம் செல்ல வாய்ப்புள்ளதாக ஒருசில அரசியல் நோக்கர்கள் கூறிவந்தனர். இந்நிலையில் உங்கள் பார்வை திமுக பக்கம் திரும்புமா என டிடிவி தினகரனிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு எவ்வித மறுப்பும் தெரிவிக்காத டிடிவி, பொறுத்திருந்து பாருங்கள் என புன்னகையுடன் பதில் அளித்துள்ளார்.

error: Content is protected !!