News August 10, 2025
லைட்ஹவுஸ் பார்வை நேரம் மாற்றம்!

நாகை வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை லைட் ஹவுசில், தினமும் பார்வை பார்வை நேரம் மாலை 3.30 முதல் 5.30 மணி வரையாக இருந்தது. இந்நிலையில், அந்த நேரம் மாற்றப்பட்டு தினமும் காலை 10 முதல் மதியம் 1 மணி வரையிலும், மதியம் 2.30 முதல் மாலை 5.30 மணி வரையிலும் இனி பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திங்கள்கிழமை விடுமுறை என லைட் ஹவுஸ் நிர்வாகி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
Similar News
News August 10, 2025
நாகை: வங்கியில் பணிபுரிய சூப்பர் வாய்ப்பு!

நாகை பட்டதாரி இளைஞர்களே வங்கி வேலைக்கு செல்ல ஒரு சூப்பர் வாய்ப்பு வந்துள்ளது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (IOB) 750 Apprentices பணியிடங்கள் நிரப்படவுள்ளது. இதற்கு ஏதேனும் பட்டப்படிப்பு முடித்தால் போதும். வயது வரம்பு 20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். மாத சம்பளமாக ரூ.15,000 முதல் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News August 10, 2025
நாளை நிறைவு பெறும் புத்தக கண்காட்சி

நாகையில் கடந்த ஆக.1ம் தேதி தொடங்கி நடைப்பெற்று வரும் புத்தக கண்காட்சி நாளை ஆக.11ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. நாள்தோறும் காலை மாலை இருவேளையும் புத்தக கண்காட்சியுடன் பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற்ற இந்த விழா நிறைவை முன்னிட்டு, நாளை மாலை 6 மணிக்கு பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விழா பேருரை நிகழ்த்தி பரிசுகள் வழங்குகிறார்.
News August 10, 2025
நாகை புத்தகத் திருவிழாவில் பழமையான கார் கண்காட்சி

நாகப்பட்டினம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நான்காவது புத்தகத் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவில் நேற்று முதல் பழமையான கார் கண்காட்சி இடம்பெற்றுள்ளது. நாளை (ஆக.11) வரை நடைபெறும் இந்த கண்காட்சி பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. மேலும் பழங்காலத்தில் பயன்படுத்தி வந்த மகிழுந்துகள் இதில் இடம் பெற்றுள்ளன.