News February 1, 2025

லேப்டாப் திருடிய நபருக்கு 17 ஆண்டு சிறை தண்டனை

image

பட்டாபிராம் மிட்டினமல்லி ரயில் நிலையத்தில் கடந்த 2023இல் ரயிலில் பயணித்த கல்லூரி மாணவி வர்ஷாவிடம் லேப்டாப், செல்போனை மர்ம நபர் ஒருவர் பறித்துக்கொண்டு தப்பினார். இந்த வழக்கின் இறுதி விசாரணையில், சிவக்குமார் (45) என்பவர் திருடியது நிரூபிக்கப்பட்டது. திருவள்ளூர் நீதிமன்றம் அவருக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. பின், ஆவடி ரயில்வே போலீசார் சிவக்குமாரை புழல் சிறையில் அடைத்தனர்.

Similar News

News August 31, 2025

திருவள்ளூர்: சம்பள பிரச்சனையா? ஒரு CALL போதும்

image

உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ, சரியாக ஊதியம் வழங்காவிட்டாலோ தொழிலாளர் நல வாரியத்தில் புகாரளிக்கலாம். தொழிலாளர் துறை ஆணையர்-044-24321302, தொழிலாளர் மேம்பாட்டு துறை-044-25665566, கட்டுமான தொழிலாளர் நலவாரியம்-044-28264950, உடலுழைப்பு தொழிலாளர் நலவாரியம்-044-28110147, வீட்டு பணியாளர் நலவாரியம்-044-28110147. ஆட்சியர் அலுவகத்தில் உள்ள தொழிலாளர் நலவாரிய அலுவலகத்திலும் புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க

News August 31, 2025

BREAKING: திருவள்ளூர் எம்.பி 3வது நாளாக…. பரபரப்பு

image

மத்தியரசு தமிழகத்திற்கு கல்வி நிதியை வழங்காததை கண்டித்து உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கிய திருவள்ளூர் எம்.பி சசிகாந்த் செந்தில் நேற்று உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று அவர் மருத்துவமனையிலும் உணவு உண்ண மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். மத்தியரசு தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

News August 31, 2025

திருவள்ளுர்:அதிகாரிகளால் ரூ.12 கோடி வீண்; கலெக்டர் உத்தரவு

image

திருவள்ளுர் மாவட்டத்தில் 14 ஒன்றியங்களில் 526 ஊராட்சிகளுக்கு, 2023 – 24ம் ஆண்டு 86 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இதில் பல பணிகள் கிடப்பில் போடப்பட்டு இருந்த நிலையில், 12.97 கோடி ரூபாய் பணிகளை கலெக்டர் பிரதாப் ரத்து செய்து, நிதியை திருப்பி அனுப்ப உத்தரவிட்டுள்ளார். அதிகபட்சமாக வில்லிவாக்கத்தில் ரூ.3,32,46,204 திருப்பி அனுப்ப பட உள்ளது.

error: Content is protected !!