News November 25, 2025
லெஜெண்ட்களின் லிஸ்ட்டில் சேர்ந்த ஜெய்ஸ்வால்!

கவுஹாத்தி டெஸ்ட்டில் <<18385744>>இந்திய அணி<<>> பரிதாபமான நிலையில் உள்ளது. இது சோகமானது தான் என்றாலும், ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரும் சம்பவம் ஒன்றும் நிகழ்ந்துள்ளது. இந்தியாவுக்காக டெஸ்ட்டில் அதிவேகமாக 2,500 ரன்களை விளாசிய லெஜெண்ட்களின் லிஸ்ட்டில் ஜெய்ஸ்வால் இணைந்துள்ளார். அதிவேகமாக 2,500 ரன்களை எட்டிய இந்திய வீரர்களின் டாப் 5 பட்டியலை கொடுத்துள்ளோம். போட்டோவை வலது பக்கமாக Swipe செய்து அவர்கள் யார் என பாருங்க.
Similar News
News April 10, 2026
தர்பூசணி விலை மளமளவென குறைந்தது

தமிழகத்தில் வெயில் வெளுத்து வாங்குகிறது. இதற்கு இதமாக தர்பூசணி, இளநீர், வெள்ளரி ஆகியவற்றை மக்கள் நாடுகின்றனர். அதற்கேற்றார்போல் தர்பூசணி வரத்தும் சந்தைகளில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் 1 கிலோ தர்பூசணி ₹12 – ₹15 வரை விற்பனையாகிறது. சில்லறை கடைகளில் 1 கிலோ ₹20 – ₹25 வரையே விற்பனையாவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். தர்பூசணி ஜூஸும் ₹20-க்கே சில இடங்களில் கிடைக்கிறது.
News April 10, 2026
கனிமொழிக்கு அண்ணனை பார்த்து பயமா? குஷ்பு

TN-ல் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக குஷ்பு விமர்சித்துள்ளார். பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து கனிமொழி ஏன் மவுனம் காக்கிறார்; தனது அண்ணனிடம் கேள்வி கேட்க பயப்படுகிறாரா என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், திமுகவினர் பெண்களை வெறும் பாலியல் பொருளாக பார்ப்பதால் தான், மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் பெருகி வருவதாகவும் அவர் சாடியுள்ளார்.
News April 10, 2026
வங்கிக் கணக்கில் ₹6,000.. காலையிலேயே HAPPY NEWS

தமிழக தேர்தலை முன்னிட்டு, காங்., தரப்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் முக்கியமாக PM Kisan திட்டத்தின் கீழ், விலக்கப்பட்ட நிலமற்ற விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ₹6,000 வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை, நிலமுள்ள விவசாயிகளுக்கு, குறிப்பிட்ட விதிகளின் கீழ் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு 3 தவணைகளாக ஆண்டுக்கு ₹6,000 வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


