News April 25, 2024
லாரி மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் அடுத்த லா.கூடலூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார் (26), கட்டிட தொழிலாளி. இவர் நேற்று அதே கிராமத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற பொழுது கொணக்கலவாடி ஏரி அருகே லாரி மோதிய விபத்தில் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இது குறித்து ரிஷிவந்தியம் போலீசார் நேற்று (ஏப்ரல்.,23) வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News January 22, 2026
கள்ளக்குறிச்சி மக்களே.., 5 ஏக்கர் நிலம் வாங்க வாய்ப்பு!

பெண்கள் சொந்த நிலம் வாங்க தமிழக அரசு அறிமுகப்படுத்திய ‘நன்னிலம்’ திட்டத்தின் கீழ் 2.5- 5 ஏக்கர் வரையிலான நிலம் வாங்க 50% மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள்ளிருக்கும் 18 – 56 வயது வரை உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புவோர் TAHDCO அலுவலகத்தில் நேரடியாக சென்றோ (அ) <
News January 22, 2026
JUST IN: கள்ளக்குறிச்சியில் மழை கொட்டப்போகுது!

கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களே.., மாவட்டம் முழுவதும் நாளை மறுநாள்(ஜன.25) கனமழை பெய்யக் கூடுமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆகையால், பொதுமக்கள் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். வெளியே வேலைக்கு செல்வோர், மறக்காமல் குடை எடுக்கத் தவறாதீர். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News January 22, 2026
கள்ளக்குறிச்சி: CBI வங்கியில் 350 காலியிடங்கள்! APPLY

கள்ளக்குறிச்சி மக்களே.., CBI வங்கியில் 350 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு ஏதேனும் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.44,480 முதல் ரூ.1,05,280 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் உடனே இங்கு <


