News March 17, 2025
லாரி மீது பைக் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு

விழுப்புரம், அற்பிசம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் விநாயகம் (62). இவர் நேற்று முன்தினம் பூவரசன்குப்பத்திலிருந்து அற்பிசம்பாளையத்திற்கு பைக்கில் சென்றுள்ளார். அப்போது அவ்வழியே வந்த லாரி மீது பைக் மோதியதில் பலத்த காயமடைந்த விநாயகம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வளவனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News September 23, 2025
விழுப்புரம்: சட்ட சிக்கல் தீர இங்கு போங்க!

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூரில் கிருபாபுரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது, இந்த கோயில் சுமார் 1,200 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கோயிலாக கருதப்படுகிறது. மேலும் இந்தக் கோயில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். இங்கு தரிசிப்பதின் வழியே சட்டரீதியான சிக்கல்கள், குடும்பப் பிரச்சினைகள் அல்லது எந்தவொரு வழக்குகளிலும் வெற்றி பெறலாம் என்று நம்பப்படுகிறது. மேலும் கடன் தொல்லை நீங்குவதாக ஐதீகம்.ஷேர்.
News September 23, 2025
விழுப்புரம்: தெற்கு ரயில்வேயில் சூப்பர் வேலை.. NO EXAM!

தமிழ்நாடு தெற்கு ரயில்வேயில் 3518 அப்ரண்டிஸ் வேலைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10th, 12th, ITI தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். தேர்வு ஏதும் கிடையாது. இந்த பணிக்கு 15-24 வயதுடையவர்களாக இருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் <
News September 23, 2025
விழுப்புரம் விவசாயிகளுக்கு ஆட்சியர் அழைப்பு

திண்டிவனத்தில், உயிர்ம வேளாண்மை விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் கருத்தரங்கு, ஸ்ரீசங்கமித்ரா திருமண மண்டபத்தில் நாளை (செப்.24) நடைபெறவுள்ளது. கருத்தரங்களில், வேளாண்மை, மண் வளம், உற்பத்தி உத்திகள், உயிர்ம வேளாண்மையின் முக்கியத்துவம் குறித்து கலந்துரையாடல் நடைபெறுவதால், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் அறிவித்துள்ளார்.