News October 22, 2024
லாரி மீது பைக் மோதியதில் இளைஞர் பலி
சென்னை, காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் (38). தனியார் நிறுவன ஊழியரான இவர், நேற்று (அக்.21) தனது டூவீலரில் திண்டிவனத்தில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தார். மதுராந்தகம் அடுத்த ஊனமலை அருகே வந்தபோது முன்னாள் சென்ற லாரி திடீரென வலதுபுறம் திரும்பியதால் டூவீலர் லாரி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ராஜேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மதுராந்தகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News November 20, 2024
பண்டிகைகளை முன்னிட்டு ரயில் சேவை நீட்டிப்பு
கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகைகளை முன்னிட்டு, 10 சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் நாகர்கோவில் – தாம்பரம் சிறப்பு ரயில் பிப்.2ஆம் தேதி வரையிலும், வியாழக்கிழமைகளில் இயக்கப்படும் நெல்லை – சென்னை எழும்பூர் ரயில் சேவை பிப்.6ஆம் தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க
News November 20, 2024
ரயில் சேவையில் மாற்றம்: நோட் பண்ணிக்கோங்க
சென்னை எழும்பூர் – விழுப்புரம் மாவட்டத்தின் சிங்கப்பெருமாள் கோயில் – செங்கல்பட்டு ரயில்வே நிலையங்கள் இடையிலான பகுதிகளில் இன்று (நவ.20) முதல் நவ.23ஆம் தேதி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால், பிற்பகல் 1.10 மணி முதல் பிற்பகல் 4.10 மணி வரை சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து செங்கல்பட்டு செல்லும் ரயில்கள் சிங்கப்பெருமாள் கோயில் ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும். ஷேர் பண்ணுங்க
News November 20, 2024
விவசாயிகள் குறைதீர் கூட்டம்: ஆட்சியர் தகவல்
செங்கல்பட்டு மாவட்டத்தில், விவசாயிகள் குறைதீர் கூட்டம் கோட்ட அளவில் நடைபெற உள்ளது. வரும் 21ஆம் தேதி மதுராந்தகத்திலும், 22ஆம் தேதி செங்கல்பட்டிலும் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. காலை 11 மணிக்கு தொடங்கும் இந்தக் கூட்டங்களில் விவசாயிகள் மற்றும் விவசாய பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவித்து நிவாரணம் பெற்றுக்கொள்ளலாம் என ஆட்சியர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க