News March 16, 2025
லாரி டிரைவர் விஷம் குடித்து தற்கொலை போலீசார் விசாரணை

செட்டிகுளம் கிராமத்தில் சுரேஷ் – 50 லாரி டிரைவர் இவரை கடந்த 2 நாட்களாக காணவில்லை என தெரிகிறது. இந்நிலையில் செட்டிகுளத்தில் உள்ள அவரது வயலுக்கு அருகே பூச்சிகொல்லி மருந்து குடித்து சுரேஷ் இறந்து கிடந்தார். இது குறித்து தகவலறிந்த பாடாலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சுரேசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இன்று வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்
Similar News
News September 13, 2025
பெரம்பலூர்: இழப்பீடு பணத்தை ஏமாற்றிய 2 பேர் கைது

ஒகளூரை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ராஜசேகர் (28) என்பவர் தனது தந்தை வெளிநாட்டில் வேலைபார்த்த போது உடல்நிலை சரியில்லாமல் சொந்த ஊருக்கு அனுப்பி, அவரது வங்கி கணக்கிற்கு ரூ.19,09,004 இழப்பீட்டு தொகையாக வெளிநாட்டில் இருந்து கிடைத்ததாகவும், அதனை தனது அண்ணி, அவரது உறவினர்கள் சேர்ந்து தனக்குத் தெரியாமல் ஏமாற்றியதாக கொடுத்த புகாரின் பேரில், கதிர்வேல் (65), ராஜேஸ்வரி (52) ஆகியோரை நேற்று போலீசார் கைது செய்தனர்.
News September 13, 2025
பெரம்பலூர்: 50% மானியத்தில் வாங்க மிஸ் பண்ணாதீங்க!

பெரம்பலூர் மக்களே கிரைண்டர் வாங்க போறீங்களா? அப்போ தமிழக அரசு கொடுக்கும் 5,000 மானியத்தை புடிங்க. வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பெண்கள், ஆதரவற்றோர், கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் உங்கள் வயது 25க்கு மேல் இருந்தால் இதற்கு APPLY பண்ணலாம். இதற்கு பெரம்பலூர் மாவட்ட சமூக நல அலுவரிடம் உங்கள் ஆவணங்களை சமர்பித்து விண்ணப்பிக்க மறந்துடாதீங்க. மற்றவர்களுக்கும் SHARE செய்து APPLY பண்ண சொல்லுங்க.
News September 13, 2025
பெரம்பலூர்: தீபாவளிக்கு பட்டாசு கடை வைக்க அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் 2025-ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு, வெடிபொருள் விதிகள் 2008-ன் கீழ் தற்காலிக பட்டாசு சில்லறை வணிகம் செய்ய, இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தங்களது விண்ணப்பத்தினை 10.10.2025–க்குள் இசேவை மையங்களின் மூலமாக அல்லது www.tnesevai.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.