News November 30, 2024

லாரி, கார் நேருக்கு நேர் மோதியதில் தாய், மகன் பலி

image

மதுரை கே.கே நகரைச் சேர்ந்த வாசுதேவன் (40), மனைவி அனிதா (33) இவர்களது மகன் கனிஷ்கர் (15) அருண்மொழி (14) ஆகியோர் சொந்த காரில் இன்று அழகன்குளம் வந்தனர். ராமநாதபுரம் கருங்குளம் அருகே வந்தபோது எதிரே வந்த லாரி நேருக்கு நேர் மோதியது. இதில் அனிதா, கனிஷ்கர் இறந்தனர். காயமடைந்தோருக்கு ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News December 26, 2025

ராமநாதபுரம்: பிரதமரின் வீட்டு வசதி திட்டம் பற்றி தெரியுமா?

image

ராமநாதபுரம் மக்களே நடுத்தர வாசிகளின் சொந்த வீடு கனவை நிறைவேற்றும் சூப்பர் திட்டமாக பிரதம மந்திரியின் வீட்டு வசதி திட்டம் உள்ளது. இத்திட்டத்தின் மூலம் பயனாளிகளுக்கு வீடு கட்ட ரூ.2.30 லட்சம் மானியமாக வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை உங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் SHARE செய்து தெரியபடுத்துங்க.

News December 26, 2025

ராமநாதபுரம்: கோயிலை உடைத்து அம்மன் அணிந்த நகை திருட்டு

image

இராமநாதபுரம் மாவட்டம், பெருநாழி அருகே டி.எம்.கோட்டை கிராமத்தில் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி திருக்கோயில் உள்ளது. இந்த கோவில் பூசாரி ராமசாமி வழக்கம் போல் (டிச, 25) கோயிலை திறந்துள்ளார். அப்போது அம்மன் இருக்கும் கதவு உடைக்கப்பட்டு அம்மன் கழுத்தில் இருந்த வெள்ளி தாலி, சிசிடிவி கேமரா, DVR, ஆம்ப்ளிபையர், ரேடியோ ஆகியவை திருடப்பட்டுள்ளது. இது தொடர்பாக பெருநாழி காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 26, 2025

ராமநாதபுரம்: ஹோட்டலில் பிரச்னையா? ஒரு SMS போதும்!

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் சாலையோர கடைகள், ஹோட்டல்களில் வடை, சிக்கன் போன்ற உணவு பலகாரங்களை செய்தித்தாள்களில் உணவு வழங்குபடுவது. மேலும் உணவுகள் சுகாதாரமற்றதாக இருந்தால் கடைகள் மீது ராமநாதபுரம் உணவு பாதுகாப்பு நியமன அலுவலரிடம் 88799 99216 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணி தெரியபடுத்துங்க மக்களே!

error: Content is protected !!