News April 19, 2025

லாரியில் சிக்கி 5 கி.மீ., இழுத்து செல்லப்பட்ட இளைஞரின் உடல்

image

மதுரை, வாடிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சூரியபிரகாஷ் 30. இவருக்கு மனைவி பிரியா 25, 2 மகள்கள் உள்ளனர். நேற்று அதிகாலை வாடிப்பட்டியிலிருந்து டூவீலரில் சென்றபோது ஆண்டிபட்டி பங்களா அருகே மதுரை நோக்கி சென்ற லாரியின் பின் சக்கரத்தில் மோதி டூவீலருடன் சிக்கி உடல் 5 கி.மீ. வரை இழுத்து செல்லப்பட்டது. லாரியில் உடல் சிக்கி இருப்பதை கண்ட சிலர் டூவீலரில் சென்று தகவல் தெரிவித்த பின்பு தான் டிரைவருக்கு தெரியவந்தது.

Similar News

News January 27, 2026

மதுரையில் பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

image

மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது.இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
1.மதுரை மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 0452-2535067
2. தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441
3. Toll Free 1800 4252 441
4.சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
5.உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News January 27, 2026

மதுரை: கரண்ட் கட்.? இனி Whatsapp மூலம் தீர்வு

image

மதுரை மாவட்டத்தில் உங்கள் பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், மின்கம்பிகள், திடீர் கரண்ட் கட் உள்ளதா? இது குறித்து மின்வாரியத்திடம் WhatsApp மூலமாக எளிதில் புகாரளிக்க இந்த 89033 31912 எண்ணிற்கு எவ்வித அலைச்சலும் இல்லமால் போட்டோவுடன் புகாரளிக்கலாம். மேலும் அவசர உதவிக்கு – 94987 94987 இந்த எண்ணிலும் அழைக்கலாம். இத்தகவலை எல்லோரும் பயன்பெற SHARE பண்ணுங்க.

News January 27, 2026

மதுரையில் டிஜிட்டல் அரஸ்ட்; போலீசார் விசாரணை

image

மதுரை பழங்காநத்தம் பகுதியை சேர்ந்த காளமேகம் இவருக்கு போன் அழைப்பு வந்தது. அதில் சென்னை போலீஸ் தலைமைகத்திலிருந்து எஸ்ஐ அருண்குமார் பேசுவதாகவும், மும்பை தீவிரவாத தடுப்புக் குழுவில் இருந்து நோட்டீஸ் வந்துள்ளதாகவும் டிஜிட்டல் அரெஸ்ட் குறித்து, காளமேகத்திற்கு விழிப்புணர்வு இருந்ததால் சுதாரித்துக் கொண்டார். இதுக்குறித்து கமிஷனர் லோகநாதனிடம் புகார் அளித்தார். போலீசார் விசாரணை.

error: Content is protected !!