News April 25, 2024
லாரியில் சட்டவிரோதமாக கூழாங்கற்கள் கடத்தல்

திருச்சுழி அருகே இசலி கிராம நிர்வாக அலுவலர் குணசுந்தரி தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் அங்குள்ள மதுபான கடை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த லாரியை மடக்கி சோதித்ததில் அதில் அனுமதி இன்றி சட்ட விரோதமாக 300 மூடைகளில் கூழாங்கற்கள் கடத்தப்படுவது தெரியவந்தது. இது குறித்து நரிக்குடி போலீசார் லாரியை பறிமுதல் செய்து இருவர் மீது நேற்று ஏப்ரல் 24 வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
Similar News
News February 11, 2026
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒருவர் தற்கொலை

ஸ்ரீவி, கொத்தன்குளம் பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததால் மனைவி பெருமாளம்மாள் கண்டித்துள்ளார். இதனால் அடிக்கடி செத்து விடுவேன் என்று சொல்லியுள்ளார். இந்நிலையில், பெருமாளம்மாள் மகளை விடுவதற்கு சென்றிருந்த நிலையில், மாரியப்பன் காட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். வன்னியம்பட்டி போலீசார் பெருமாளம்மாளின் புகாரின் பேரில் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News February 11, 2026
சிவகாசி அருகே ஆட்டோ டிரைவர் அடித்து கொலை

மதுரை ஜெய்ஹிந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (46). ஆட்டோ ஓட்டுனரான இவரது மனைவி பிரியா (29) பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வந்து நிலையில் சிவகாசி அருகே புதுக்கோட்டையை சேர்ந்த லோடு வேன் டிரைவர் சங்கருடன் (27) பழக்கம் ஏற்பட்டு தனது கணவர் ரமேஷை பிரிந்து சங்கருடன் வாழ்ந்து வந்தார். இதையறிந்து மனைவி ப்ரியா, பிள்ளைகளை அழைத்து செல்ல வந்த ரமேஷை சங்கர் நண்பருடன் சேர்ந்து அடித்து கொலை செய்தார்.
News February 10, 2026
விருதுநகர்: பெண்களுக்கு இலவச தையல் மிஷின் வேண்டுமா?

விருதுநகர் மக்களே, பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பெண்கள், மாற்றுத்திறனாளிகள் சுயசார்புடன் வாழ சத்யவாணி முத்து அம்மையார் நினைவாக தையல் இயந்திரங்கள் இலவசமாக வழங்கபடுகின்றன. ஆண்டு வருமானம் ரூ.72,000-க்கும் குறைவாக உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் அல்லது விருதுநகர் மாவட்ட சமூக நல அலுவலரை அனுகலாம். SHARE பண்ணுங்க


