News April 22, 2024

லாரிகளால் விபத்து ஏற்படும் அபாயம்

image

அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டியில் இருந்து அரியலூர் கலெக்டர் அலுவலகம் வரை 12 வேகத்தடைகள் உள்ளது. இந்த வேகத்தடைகள் பெயரளவிற்கு மட்டுமே போடப்பட்டு உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் லாரிகளால் அடிக்கடி போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ,வேகத்தடைகளை ஆய்வு செய்து முறையான வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News

News April 19, 2025

குண்டர் தடுப்பு சட்டத்தில் இளைஞர் கைது

image

அரியலூர் மாவட்டம் கீழக்கொளத்தூரைச் சேர்ந்த விக்னேஷ்ராஜ்(26) மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. கடந்த மாதம் 18ஆம் தேதி  சிற்றுந்து ஓட்டுநரை மிரட்டி பணம் பறித்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இவர் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடலாம் என்ற காரணத்தால், கீழப்பழூர் காவல் ஆய்வாளர் பரிந்துரையில், மாவட்ட ஆட்சியர் அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

News April 18, 2025

இரவு ரோந்து போலீசாரின் விவரம்

image

அரியலூர் மாவட்டத்தில் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் அரியலூர், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், செந்துறை, திருமானூர், மீன்சுருட்டி, தா.பழூர் உள்ளிட்ட பகுதிகளில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவசர உதவிக்கு மாவட்ட காவல் அலுவலகம் வெளியிட்டுள்ள போலீசாரின் கைப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

News April 18, 2025

அரியலூர் – ரயில்வே வேலை வாய்ப்பு

image

இந்திய ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் (RRBs) சார்பில் தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள 510 உதவி லோகோ பைலட் (ALP) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. டிப்ளமோ, பி.ஈ/பி.டெக் முடித்த 18 முதல் 30 வயதுக்குட்பட்ட நபர்கள் rrbchennai.gov.in என்ற இணையதளம் வாயிலாக இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 11.05.2025. மத்திய அரசு வேலை தேடும் நபர்களுக்கு இதை ஷேர் செய்யவும்.

error: Content is protected !!