News December 25, 2024
லாயம்: ரூ.6 கோடி மதிப்புள்ள திமிங்கில உமிழ்நீர் சிக்கியது!

ஆரல்வாய்மொழி சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன் தலைமையில் போலீசார் நேற்று(டிச.24) இரவு லாயம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பைக்கில் வந்த 2 பேர் நிற்காமல் சென்றனர். அவர்களை விரட்டி பிடித்தபோது, சாக்கு முட்டையை கீழே போட்டுவிட்டு தப்பினர். அதை திறந்து பார்த்தபோது சுமார் ரூ.6 கோடி மதிப்புள்ள 5.690 கிலோ திமிங்கல உமிழ்நீர் இருந்தது. போலீசார் அவற்றை வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
Similar News
News August 23, 2025
குமரி: ரூ.1 லட்சம் மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

குமரி பெண்களே, தமிழ்நாடு அமைப்பு சாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுதுபார்க்கும் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற பெண் ஆட்டோ ஓட்டுநர்கள், திருநங்கைகளுக்கு நலவாரியத்தின் மூலம் ஆட்டோ வாங்க ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. ஆர்வமுள்ளவர்கள் www.tnuwwb.tn.gov.in மூலம் ஆவணங்களை பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்கலாம். இத்தகவலை உங்களது நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.
News August 23, 2025
குமரி: 10th போதும் ரூ.71,000 சம்பளத்தில் அரசு வேலை!

குமரி இளைஞர்களே, தமிழக அச்சுத்துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் பிரிவில் 56 காலியிடங்கள் உள்ளன. இப்பணிகளுக்கு 10th, ITI படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு இல்லை. மாத சம்பளம் ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை வழங்கப்படும். <
News August 23, 2025
குமரி மாவட்டத்தின் பழைய பெயர் என்ன தெரியுமா ?

கன்னியாகுமரி மாவட்டம் முந்தைய காலத்தில் திருவிதாங்கூர் என்றே அழைக்கப்பட்டது. 1949 ல் திருவிதாங்கூர் சமஸ்தானம், கொச்சி சமஸ்தானத்துடன் இணைந்து திருவிதாங்கூர்-கொச்சி மாகாணம் உருவானது. 1956ல் மாநிலங்கள் சீரமைப்பு சட்டத்தின் கீழ் மொழி அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது, கன்னியாகுமரி மாவட்டத்தின் தமிழ் பேசும் பகுதிகள் தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட்டு, கன்னியாகுமரி மாவட்டம் என அழைக்கப்பட்டு வருகிறது.