News January 8, 2025
லாட்டரி சீட்டு விற்பனை செய்த 118 நபர்கள் கைது

கோவை காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாவட்டம் முழுவதும், நடத்தப்பட்ட அதிரடி சோதனையில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட, வெளி மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனைக்கு வைத்திருந்த, 110 வழக்குகள் பதிவு செய்யப்பட்டும், 118 பேரை கைது செய்தும், அவர்களிடமிருந்து இரண்டு சக்கர வாகனம்-4, செல்போன்-11 மற்றும் ரூபாய் 2,24,00,170/- பறிமுதல் செய்தனர் என்றார்.
Similar News
News January 28, 2026
ஊட்டி மலை ரயில் சேவை நாளை ரத்து

மேட்டுப்பாளையம் – ஊட்டி இடையே யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற மலை ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் இன்று மாலை குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் வந்த போது கல்லாறு – ஹில்குரோ நிலையங்களுக்கு இடையே ரயில் பாதையில் மரங்கள் முறிந்து விழுந்து தண்டவாளம் சேதமடைந்தது தெரிந்து மீண்டும் குன்னூர் சென்றது. தண்டவாள சீரமைப்பு பணிக்காக நாளை(ஜன.28) காலை மேட்டுப்பாளையம்-ஊட்டி சேவையை ரத்து செய்து ரயில்வே அறிவித்துள்ளது.
News January 27, 2026
கோயம்புத்தூர்: இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்

(27.01.2026) கோயம்புத்தூர் மாவட்டம் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி இரவு நேரங்களில் வெளியில் பயணிக்கும் நபர்கள் ஆபத்தான சூழலில் மேலே அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள எண்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. .
News January 27, 2026
கோவை: ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை !APPLY NOW

கோவை மக்களே முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை சிகிச்சை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் இணைய விரும்புவோர் குடும்ப அட்டை, ஆதார் மற்றும் வருமானச் சான்றிதழுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள மையத்தில் பதிவு செய்து அடையாள அட்டை பெற்றுக்கொள்ளலாம். கூடுதல் தகவல்களுக்கு 1800 425 3993 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.


