News March 29, 2026
லாக் டவுன்? பிரதமர் மோடி மவுனம் கலைத்தார்

மேற்காசிய போர்ச் சூழலால் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகிறது. இது மீண்டும் கொரோனா போன்ற சூழலை உருவாக்கியுள்ளதால், இந்தியாவில் லாக் டவுன் போட வாய்ப்புள்ளதாக தகவல்கள் பரவின. இந்நிலையில், இதுபோன்ற வதந்திகளை பரப்பி சிலர் நாட்டிற்கு தீங்கு விளைவிப்பதாக PM மோடி எச்சரித்துள்ளார். ‘மன் கி பாத்’ நிகழ்வில் பேசிய அவர், தவறான தகவல்களால் வழிதவறி விட வேண்டாம் என்றும் அவர் நாட்டு மக்களை கேட்டுக் கொண்டார்.
Similar News
News April 10, 2026
PM KISAN திட்டத்தின் ₹2,000.. மகிழ்ச்சியான அப்டேட் வந்தது

PM KISAN திட்டத்தின் அடுத்த தவணையை (₹2,000) ஜூன் இறுதி (அ) ஜூலை தொடக்கத்தில் விடுவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மகிழ்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. இந்த திட்டத்தில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்க, விவசாயி அடையாள எண் (UNIQUE FARMER ID) கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை பெறாதவர்களுக்கு ₹2,000 நிறுத்தப்படலாம். மாநில அரசின் <
News April 10, 2026
தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் நீக்கம்

கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக TN மகிளா காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து ஹசீனா சையத் நீக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக ராகுல் காந்திக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். தேர்தலில் போட்டியிட சீட் கேட்டதற்கு தான் அவமானப்படுத்தப்பட்டதாகவும் அதில் அவர் வேதனை தெரிவித்துள்ளார். இதுகுறித்து கார்கேவிடம் முறையிட்டும் பலனில்லை என்றும் கூறியுள்ளார்.
News April 10, 2026
விஜய் ரசிகர்களுக்காகவே ஸ்பெஷல் ஏற்பாடு

விஜய்யை பார்க்கவேண்டும் என்ற ஆர்வத்தில் கம்பம், மரம் என உயரமான இடங்களில் ரசிகர்கள் ஏறிவிடுகிறார்கள். இதனால் அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தடுக்க, சிவகங்கையில் இன்று விஜய் வருவதற்கு முன்னதாக அங்கு சில பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அந்த ஏற்பாடுகளை மேலே கொடுக்கப்பட்ட போட்டோக்களை ஸ்வைப் செய்து பாருங்கள்.


