News April 13, 2024

லட்சக்கணக்கில் மோசடி: மூவர் மீது வழக்கு பதிவு

image

விருதுநகர் ஆணைக் குழாய் தெருவை சேர்ந்தவர் ரமேஷ்(24). இவரிடம் பொதுப்பணி துறையில் ஜூனியர் உதவியாளர் வேலை வாங்கித் தருவதாக கூறி சத்திரரெட்டியாபட்டியை சேர்ந்த ரவீந்திரன், கோவையைச் சேர்ந்த உஷாராணி, காஞ்சிபுரத்தை சேர்ந்த கௌரிசங்கர் ஆகியோர் 6.85 லட்சத்தை பெற்று போலி நியமன ஆணையை வழங்கி உள்ளனர். இதுகுறித்து ஊரக போலீசார் நேற்று 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Similar News

News January 27, 2026

ராஜபாளையம்: ஜாமீனில் வந்தவர் தற்கொலை

image

ராஜபாளையம் அருகே சேத்தூர் மேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் பரமசிவம், இவருடைய மகன் வேல்முருகன். இவர்கள் இருவரையும் வசந்தகுமார் என்பவர் கொலை வழக்கில் சேத்தூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் ஜாமினில் வெளியே வந்த பரமசிவம் திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சேத்தூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

News January 27, 2026

விருதுநகர்: ரூ.6 செலுத்தினால் ரூ.1 லட்சம் கிடைக்கும்

image

விருதுநகர் மக்களே, போஸ்ட் ஆபீஸில் ‘பால் ஜீவன் பீமா யோஜனா’ என்ற திட்டத்தின் கீழ் நாள் ஒன்றுக்கு வெறும் ரூ.6 பிரீமியமாக செலுத்தினால், 5 வருடங்கள் கழித்து ரூ.1 லட்சம் வரை ஆயுள் காப்பீடு கிடைக்கும். இதனை 5 முதல் 20 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பெயரில் தொடங்கலாம். கூடுதல் தகவலுக்கு உங்கள் அருகிலுள்ள போஸ்ட் ஆபீஸ்-ஐ அணுகவும். ( நல்ல தகவலை SHARE பண்ணுங்க)

News January 27, 2026

ஸ்ரீவி: சமூக வலைதளங்களில் பரப்பப்படும் வதந்தி

image

ஸ்ரீவியில் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட திருநங்கை முத்தரசி என்பவர் தன் மீது பெட்ரோலை ஊத்தி தீ வைத்துக் கொண்ட நிலையில் போலீசார் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட திருநங்கை மீது போலீசார் தீ வைத்ததாக கூறி சமூக வலைதளங்களில் வீடியோ பரவி வருகிறது. இது முற்றிலும் வதந்தி என தமிழ்நாடு சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது. SHARE IT

error: Content is protected !!