News January 19, 2026

லடாக்கில் நிலநடுக்கம்… குலுங்கிய கட்டிடங்கள்!

image

பிரபல சுற்றுலாத்தலமான லடாக்கில் இன்று 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் கட்டிடங்கள் லேசாக குலுங்கியதால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். தேசிய நில அதிர்வு மையம் (NCS) வெளியிட்ட தகவலின்படி, லே மற்றும் லடாக் பகுதியில் 171 கிமீ ஆழத்தில் காலை 11.51 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், எனினும் இதுவரை அங்கு பாதிப்பு, உயிரிழப்புகள் ஏற்பட்டதாக எதுவும் பதிவாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News January 24, 2026

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (ஜன.24) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.

News January 24, 2026

அப்துல் கலாமின் பொன்மொழிகள்

image

*கனவு என்பது தூங்கும் போது காண்பதல்ல, உங்களை தூங்க விடாமல் செய்வதே கனவு. *உங்கள் பழக்கவழக்கங்கள் நிச்சயமாக உங்கள் எதிர்காலத்தை மாற்றும். *நம்பிக்கை மற்றும் கடின உழைப்பு இரண்டும் தோல்வி எனும் நோயைக் கொல்ல சிறந்த மருந்து. *ஒரு நல்ல நண்பன் ஒரு நூலகத்திற்கு சமம். *சூரியனைப் போல நீங்கள் பிரகாசிக்க விரும்பினால், முதலில் சூரியனைப் போல எரியுங்கள்.

News January 24, 2026

வசந்த குமாரி ருக்மணி வசந்த்

image

ருக்மணி வசந்த் வெகு நாள்கள் கழித்து சேலையில் இருக்கும் போட்டோஸை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். காந்தாரா படம் வெளிவந்தபோது, அதில் சேலையில் நடித்திருந்ததால், தொடர்ந்து சேலை போட்டோஸை பதிவிட்டு ரசிகர்களை ஈர்த்து வந்தார். சமீபத்திய போட்டோஸில் அவர், வசந்தம் தழுவிய இலையாக, இலைகளுக்குள் ஒளிந்த சூரிய ஒளியாக, பச்சை நிறமே பச்சை நிறமே என பிரகாசமாக ஜொலிக்கிறார்.

error: Content is protected !!