News May 18, 2024
லஞ்சம் வாங்கி சிக்கிய மதுரை மாநகராட்சி அதிகாரிகள்

மதுரை கண்ணனேந்தல், ஓய்வுபெற்ற ஆசிரியரான பரசுராமன், சொத்து வரி மாற்றம் செய்வதற்காக விண்ணப்பித்துள்ளார். சொத்து வரி மாற்றம் செய்வதற்கு, பில் கலெக்டர் ஆறுமுகம் அவரது உதவியாளர் சுதாகர் 20000 ரூபாய் லஞ்சப்பணமாக கேட்டுள்ளனர். இது குறித்து, லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு தகவல் அளிக்க, அவர்கள் லஞ்சம் வாங்கியபோது ஆறுமுகம் மற்றும் சுதாகர் ஆகிய இருவரையும் கையும், களவுமாக பிடித்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News March 7, 2026
மதுரை மாவட்ட அரசு மருத்துவமனை எண்கள்

1.ராஜாஜி மருத்துவமனை – 04522533230
2.தோப்பூர் தொற்றுநோய் மருத்துவமனை – 04522482339
3.தோப்பூர் நெஞ்சக நோய் மருத்துவமனை – 04522482439
4.திருமங்கலம் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை – 0452280727
5.பாலரங்கபுரம் அரசு மருத்துவமனை – 04522337902
5.மதுரை அரசு மருத்துவகல்லூரி – 04522526028
மதுரையில் உள்ள அரசு மருத்துவமனைகளின் எண்களை உங்கள் பகுதி மக்களுக்கு SHARE செய்யவும்.
News March 7, 2026
இன்று மதுரை வருகிறார் முதல்வர்

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு மதுரை வருகை. இதுகுறித்து அமைச்சர்
பி.மூா்த்தி, மாவட்டச் செயலா்கள் கோ. தளபதி, மு. மணிமாறன் ஆகியோா் வெளியிட்ட அறிக்கையில்; ஓ.பன்னீா்செல்வத்தின் ஆதரவாளா்கள் திமுகவில் இணையும் நிகழ்ச்சிக்காக இன்று மதுரை வரும் முதல்வா் ஸ்டாலினுக்கு மதுரை விமான நிலையத்தில் காலை 11 மணிக்கு திமுக சாா்பில் வரவேற்பு அளிக்கப்படவுள்ளது.
இதில் திமுக நிா்வாகிகள் திரளாக பங்கேற்க வேண்டும்.
News March 7, 2026
மதுரை: போலீஸ் SI-ஐ தாக்கிய இளைஞர் கைது

பேரையூர் எஸ்எஸ்ஐ அழகர்சாமி(50) நேற்றிரவு பணி முடிந்து திருப்பதி நகர் வழியாக வீட்டிற்கு சென்ற போது, ஹரி(24), என்பவர் தனது தாயை தாக்கி கொண்டிருந்தார். அதை தடுத்த அழகர்சாமியை ஹரி அருகிலிருந்த கம்பியை பிடுங்கி தலையில் அடித்தார். இதில் படுகாயமடைந்த எஸ்எஸ்ஐ மதுரை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி
வைக்கப்பட்டார். பேரையூர் போலீசார் ஹரியை இன்று கைது செய்தனர்.


