News April 8, 2025
லஞ்சம் வாங்கிய ஒன்றிய உதவிப்பொறியாளர் கைது

குடியாத்தத்தில், செய்து முடிக்கப்பட்ட ஒப்பந்த பணிக்கு நிலுவைத்தொகை வழங்க லஞ்சம் வாங்கியதாக ஒன்றிய உதவிப்பொறியாளரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் நேற்று (ஏப்ரல் 7) கைது செய்தனர். நிலுவைத்தொகையை வழங்க தனக்கு ரூ.30,000 தர வேண்டும் என அவர் கூறியுள்ளதாக லிங்கேஸ்வரன் என்பவர் வேலூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகார் தெரிவித்துள்ளார். புகாரையடுத்து, உதவிப்பொறியாளரை போலீசார் கைது செய்தனர்.
Similar News
News April 16, 2025
வேலூர் காவல் துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் மற்றும் முக்கிய இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பாக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு வந்து பணி செய்து வருகின்றனர். அதன்படி இன்று (ஏப்ரல் 16) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.
News April 16, 2025
வேலூர் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் தகவல்

வேலூர் மாவட்டத்தில் ஏப்ரல் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் வரும் ஏப்ரல் 25-ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தலைமையில் அனைத்து துறை அரசு அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர். எனவே வேலூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை தெரிவித்து பயனடையுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News April 16, 2025
வேலூர் சிறையும் சுதந்திர போராட்டமும்

ஆங்கிலேயர் காலத்தில் அந்தமான் சிறைக்கு அடுத்தபடியாக கொடிய சிறையாக வேலூர் சிறை இருந்தது. 1830ல் தொடங்கப்பட்ட இங்கு விடுதலைப் போரில் பங்கெடுத்த வினோபாபாவே, இராஜாஜி, கர்மவீரர் காமராஜர் போன்ற தலைவர்களும், முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாவும் சிறை வாசத்தை அனுபவித்தனர். விடுதலை போராட்டதிலிருந்து இன்று வரை செயல்பட்டு வரும் இந்த சிறை தற்போது புழல் சிறைக்கு அடுத்ததாக பார்க்கப்படுகிறது. ஷேர் பண்ணுங்க