News March 2, 2025
லக்ட்ரானிக் பொருட்கள் 5ம் தேதி ஏலம்

சேலம் மாநகர போலீஸ் அலுவலகத்தில் உள்ள தொழில்நுட்ப பிரிவில் பயன்படுத்தப்பட்ட இலக்கிய எலக்ட்ரானிக்ஸ் அதன் சார்பு உபகரணங்கள் பழுதாகி உள்ளன. அதை கழிவு நீக்கம் செய்ய வருகின்ற ஐந்தாம் தேதி ஏலம் நடைபெறுகிறது. இந்த ஏலத்திலும் அரசு விதிப்படி தகுதி சான்று பெற்ற நிறுவனங்கள் மட்டுமே பங்கேற்க முடியும் விருப்பமுள்ளவர்கள் ரூபாய் 500 முன்வைப்பு தொகை செலுத்தி பங்கேற்கலாம் என போலீஸ் கமிஷனர் அறிவித்துள்ளார்.
Similar News
News November 16, 2025
வாழப்பாடி: 100 ஆண்டு ரகசியத்தை உடைத்த மாணவன்!

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் கடலூர் சாலையில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் வைக்கப்பட்ட 100 ஆண்டு பழமையான ‘மைல்கல்’ உள்ளது. இக்கல்லில் ‘செக்சன் லிமிட்’ என்று ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு கீழே சில குறியீடுகளும் காணப்படுகின்றன. இந்தக் கல்வெட்டை, வாழப்பாடியை சேர்ந்த 11-ஆம் வகுப்பு மாணவன் சிபிஅரசு ‘படி’ எடுத்து ஆய்வுக்கு அனுப்பியுள்ளார். இந்த மாணவருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
News November 16, 2025
வீராணம் விவசாயியிடம் வழிபறி; எட்டு பேர் அதிரடி கைது!

வீராணம் காவல் நிலைய எல்லைகுட்பட்ட பூவனூர் அருகே நேற்று மாலை மணிகண்டன் என்பவர் தனது தோட்டத்தில் பால் எடுத்துக்கொண்டு வரும்போது அடையாளம் தெரியாத நபர்கள் அவரை தாக்கி விட்டு அவருடைய செல்போன் பறித்து சென்றனர். இது குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசர் சரவணன்(28), சீனிவாசன், மாதங்கிதாசன்(26), மணிகண்டன்(24), ராம் குமார் (27) சுராஜ் பர்வேஸ் (19), கார்கில் (23) , விஷ்வா(20) ஆகிய 8 பேரை கைது செய்தனர்.
News November 15, 2025
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு!

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (நவ.15) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.


