News January 25, 2026

ரோஹித் சர்மா, ஹர்மன்பிரீத் கவுருக்கு பத்ம ஸ்ரீ விருது

image

இந்தியா அணியின் Ex., கேப்டனும், நட்சத்திர வீரருமான ரோஹித் சர்மாவுக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருதை அறிவித்துள்ளது. அதேபோல் மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டனான ஹர்மன் பிரீத் கவுருக்கும் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணிக்காக பல சாதனை படைத்த இருவருக்கும், கிடைத்துள்ளது இந்த அங்கீகாரத்துக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Similar News

News February 2, 2026

மத்திய பட்ஜெட்டில் ஒன்றுமே இல்லை: திருச்சி சிவா

image

மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் எதுவுமே சாதாரண மக்களுக்கு பயன்தரும் வகையில் இல்லை என திருச்சி சிவா கூறியுள்ளார். பொதிகை மலையில் டிரெக்கிங், பழவேற்காட்டில் பறவைகளைக் கண்காணிக்க 3 புதிய கோபுரங்கள் அமைப்பு போன்ற திட்டங்களை தமிழகம் கேட்கவில்லை என்ற அவர், CM ஸ்டாலின் கேட்ட ஜல் ஜீவன், கல்வியை மேம்படுத்தும் சமக்ர சிக்ஷா ஆகிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்காதது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.

News February 2, 2026

FLASH: சர்வதேச சந்தையில் தங்கம் விலை மேலும் சரிவு

image

சர்வதேச சந்தையில் தங்கம் விலை கடந்த வாரம் வரலாறு காணாத புதிய உச்சமாக 1 அவுன்ஸ்(28g) $5,500-ஐ கடந்திருந்தது. தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸ் $48 (இந்திய மதிப்பில் ₹4,400) குறைந்து $4,847.00-க்கு விற்பனையாகிறது. இதே நிலை நீடித்தால் இன்றைய தினம் இந்திய சந்தையிலும் தங்கம் விலை சற்று குறைய வாய்ப்புள்ளது.

News February 2, 2026

முக்கிய அறிவிப்பை வெளியிடும் விஜய்

image

தவெகவின் 3-ம் ஆண்டு தொடக்க விழா இன்று பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் கோலாகலமாக நடைபெறவுள்ளது. இதில், தவெக கொடியை விஜய் ஏற்றி வைத்து கட்சி நிர்வாகிகள் மத்தியில் சிறப்புரை ஆற்றவுள்ளார். அப்போது 2026 தேர்தல் களப்பணி, அடுத்தக்கட்ட அரசியல் நகர்வுகள், தேர்தல் வாக்குறுதி குறித்து முக்கிய அறிவிப்புகளை விஜய் வெளியிடுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!