News December 8, 2024
ரோந்து பணியில் 100 பாட்டில்கள் பறிமுதல்

நரிக்குடி சரக போலீசார் நரிக்குடியை சுற்றியுள்ள பகுதிகளில் மது விற்பனை தொடர்பாக ரோந்து மற்றும் வாகன தணிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பனைக்குடி பஸ் நிறுத்தம் அருகே சந்தேகிக்கும் வகையில் டூவீலரில் வந்த அ.முக்குளத்தை சேர்ந்த முத்தையாவிடம் சோதனை மேற்கொண்டதில் அவரிடம் சட்ட விரோதமான சுமார் 100 மது பாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.
Similar News
News March 6, 2026
விருதுநகர்: 100 யூனிட் இலவச மின்சாரம் – APPLY…!

விருதுநகர் மக்களே, மின் இணைப்பு மோசடிகளை தடுக்கவும், 100 யூனிட் மின்சாரம் மக்களுக்கு முறையாக கிடைக்கவும் மின் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதை அரசு கட்டாயமாக்கிருக்கு. இங்கு <
News March 6, 2026
சாத்தூர் தொகுதிக்கு திமுக சார்பில் விருப்பமனு தாக்கல்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வெம்பக்கோட்டை ஒன்றியம் இராமதேவன்பட்டியைச் சேர்ந்த வழக்கறிஞர் நல்லதம்பியின் மனைவியும், முன்னாள் மாவட்ட கவுன்சிலருமான மாலதி நல்லதம்பி சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட விருப்பம் மனுவை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நல்லதம்பி வழங்கினார்.
News March 6, 2026
விருதுநகர்: கோயில் திருவிழாவில் தகராறு: 13 பேர் கைது

விருதுநகர், அச்சங்குளம் கிராமத்தில் ஒரு சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட கோயில் நிர்வகிப்பது தொடர்பாக இரு தரப்பினர் இடையே பிரச்னை இருந்து வந்ததையடுத்து பொங்கல் திருவிழா கொண்டாடினர். இந்நிலையில் பாடலுக்கு ஆடிய போது இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்ட ஒருவரை ஒருவர் தாக்கினர். இதில் ஒரு தரப்பை சேர்ந்த சொக்கலிங்கம் உள்பட 8 பேர், எதிர் தரப்பில் அஜித்குமார் உள்பட 5 பேர் என மொத்தம் 13 பேரை கைது செய்தனர்.


