News February 22, 2025

ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரம்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (22.02.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். மக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை, மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

Similar News

News April 21, 2025

ஓட்டுநர், நடத்துநர் பணி: இன்றே கடைசி நாள்

image

அரசு போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள 3,274 ஓட்டுநர் – நடத்துநர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். 24 – 40 வயதுடையவராக இருக்க வேண்டும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். கனரக வாகனம் ஒட்டியதற்கான அனுபவம் வேண்டும். விருப்பமுள்ளவர்கள் <>இந்த லிங்கில்<<>> விண்ணப்பிக்கலாம். இன்றே (ஏப்.21) கடைசி தேதி என்பதால் உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News April 21, 2025

திருவண்ணாமலையில் புதிய மினி டைடல் பூங்கா

image

திருவண்ணாமலையில் மினி டைடல் பூங்கா கட்டுமானப் பணிகளுக்கு தமிழக அரசு டெண்டர் கோரியுள்ளது. ரூ.34 கோடி செலவில், 4 தளங்களுடன் இந்த டைடல் பூங்கா அமைக்கபட உள்ளது. ஓராண்டில் இதன் கட்டுமான பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் புதிய மினி டைட்டில் பூங்கா அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அறிவித்திருந்தார். இதன்மூலம் அதிகளவிலான வேலைவாய்ப்புகள் உருவாகும்.

News April 21, 2025

முன்னாள் ஊராட்சித் தலைவர் பைக் மோதி பலி

image

திருவண்ணாமலையை அடுத்த இசுக்கழி காட்டேரி கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி(58). முன்னாள் ஊராட்சித் தலைவர். இவர், நேற்று இரவு தண்டரை கிராமத்தில் இருந்து வீட்டுக்கு பைக்கில் சென்றுகொண்டிருந்தார். இசுக்கழி காட்டேரி கிராமம் அருகே சென்றபோது, எதிரே வந்த பைக், பழனி ஓட்டிச்சென்ற பைக் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த பழனி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து வெறையூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!