News November 6, 2025
ரொட்டி (பிஹார்) கருகிவிடும்: லாலு பிரசாத் யாதவ்

பிஹாரில் 20 ஆண்டு நிதிஷ் ஆட்சியை ரொட்டியுடன் லாலு பிரசாத் யாதவ் ஒப்பிட்டுள்ளார். குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு ரொட்டியை திருப்பி போடவில்லை என்றால் கருகிவிடும். அதுபோல, 20 ஆண்டுகள் என்பது நீண்ட காலம், எனவே ஆட்சி மாற்றம் என்பது அவசியமாகியுள்ளதாக அவர் கூறியுள்ளார். மேலும், புதிய பிஹாரை உருவாக்க இளைஞர்கள் (தேஜஸ்வி) கையில் ஆட்சி அதிகாரம் செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 7, 2025
விளையாட சென்றவர் பிணமாக திரும்பினார்… சோக மரணம்!

உ.பி., ஜான்சியில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த இளைஞரின் அகால மரணம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீண்டகாலம் கிரிக்கெட் விளையாடாமல் இருந்த 30 வயது ரவீந்திரா, சம்பவத்தன்று அதிகாலையில் எழுந்து, ‘அப்பா நான் விளையாடப் போறேன்’ சொல்லிவிட்டு மகிழ்ச்சியாக சென்றிருக்கிறார். சில ஓவர்கள் பவுலிங் செய்துவிட்டு தாகத்துக்கு தண்ணீர் குடித்தவர், அப்படியே சரிந்து விழுந்து உயிரிழந்தார். இப்படியா முடிவு வரணும்!
News November 7, 2025
ராசி பலன்கள் (07.11.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News November 7, 2025
டாப் 10 மாவட்டங்கள்.. கெத்து காட்டும் தமிழ்நாடு

ஒவ்வொரு மாநிலமும் இந்திய நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றன. குறிப்பாக, ஏற்றுமதி மூலம் உலக சந்தையில் சில மாவட்டங்கள் சிறந்து விளங்குகின்றன. இந்தியாவில் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் 70%-க்கும் மேற்பட்டவை சில மாவட்டங்களிலிருந்து வருகிறது. அவை எந்தெந்த மாவட்டங்கள் என்று, மேலே போட்டோக்களில் கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE பண்ணுங்க.


