News February 14, 2026
ரேஷன் சிறப்பு குறை தீர்ப்பு முகாம்

பொது விநியோக திட்டத்தின் கீழ் அனைத்து சேவைகளையும் ஒரே இடத்தில் பொதுமக்கள் பெறும் வகையில் மாதந்தோறும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக பிப்ரவரி மாதத்திற்கான சிறப்பு குறை தீர்ப்பு முகாம் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலக வட்ட வழங்கல் அலுவலகத்தில் இன்று (பிப்.14) நடைபெறுகிறது. பொதுமக்கள் இதனை பயன்படுத்தி கொள்ள கலெக்டர் அலுவலகம் அழைப்பு விடுத்துள்ளது.
Similar News
News February 17, 2026
கோவை: உங்க குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 வேண்டுமா?

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும், பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News February 17, 2026
மேட்டுப்பாளையத்தில் யானை பலி

மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில், இன்று காலை சுமார் 25-வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை ஒன்று சடலமாக கண்டெடுக்கப்பட்டது. 2 ஆண் யானைகளுக்கு இடையே ஏற்பட்ட கடும் மோதலில் காயம் அடைந்து இந்த யானை உயிரிழந்திருப்பது முதற்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும், இதுகுறித்து வனச்சரக அதிகாரிகள் மற்றும் கால்நடை மருத்துவர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News February 17, 2026
BREAKING: கோவை: அதிமுகவில் ஐக்கியமான பிரபலம்!

இந்திய ஜனநாயக கட்சியின் மாநில இணை பொதுச்செயலாளராக பணியாற்றிய மார்ட்டினின் மனைவியும், தவெக முக்கிய நிர்வாகி ஆதவ் அர்ஜூனாவின் மாமியாருமான லீமா ரோஸ் மார்ட்டின் இன்று அதிமுக பொதுச்செயலாளர் ஈபிஎஸ்ஸை சென்னை பசுமைவழி சாலையில் உள்ள அவரது இல்லத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகளுடன் சென்று அதிமுகவில் இணைந்தார். இந்நிகழ்வின் போது EX அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.


