News December 22, 2025

ரேஷன் கார்டுக்கு பொங்கல் பரிசு.. வெளியான புதிய தகவல்

image

கடந்த ஆண்டு போலவே பொங்கல் தொகுப்பு ஜனவரி 9-ம் தேதி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின. இந்நிலையில், இரண்டு நாள்களுக்கு முன்னதாகவே, அதாவது ஜன.7-ம் தேதியே குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு நியாயவிலை கடைகள் மூலம் விநியோகம் செய்யப்பட வாய்ப்புள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

Similar News

News December 22, 2025

ALERT: குழந்தைகளின் ஆதாரை அப்டேட் செய்துவிட்டீர்களா?

image

குழந்தைகளின் பயோமெட்ரிக் விவரங்களை ஆதாரில் அப்டேட் செய்வது கட்டாயம் என UIDAI தெரிவித்துள்ளது. பள்ளி அட்மிஷன், அரசு திட்டங்களை பெறுவதில் ஏற்படும் சிக்கலை தவிர்க்க 5 -15 வயது குழந்தைகளின் கைரேகை, போட்டோக்களை அப்டேட் செய்ய அறிவுறுத்தியுள்ளது. இந்த சேவை 2026 செப்டம்பர் 30 வரை இலவசம் என்றும் கூறியுள்ளது. எனவே, பெற்றோர்களே உடனே அருகில் உள்ள ஆதார் சேவை மையத்தை அணுகுங்கள்.

News December 22, 2025

டாஸ்மாக் கடைகள் 8 நாள்கள் விடுமுறை.. அரசு அறிவிப்பு

image

2026-ம் ஆண்டுக்கான டாஸ்மாக் விடுமுறை நாள்களை TN அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, ஜன.16 (திருவள்ளுவர் தினம்), ஜன.26 (குடியரசு தினம்), பிப்.1 (வள்ளலார் நினைவு நாள்), மார்ச் 31 (மஹாவீர் ஜெயந்தி), மே 1 (தொழிலாளர் தினம்), ஆக.15 (சுதந்திர தினம்), செப்.26 (மிலாடி நபி), அக்.2 (காந்தி ஜெயந்தி) நாள்களில் மட்டுமே டாஸ்மாக் கடைகள் இயங்காது. டாஸ்மாக் மூலம் தினமும் ₹100 கோடி அளவிற்கு அரசு வருவாய் ஈட்டி வருகிறது.

News December 22, 2025

ஒரு ஊரில் ஒருவர் மட்டும் வசிக்கும் விநோதம்

image

ஒரு ஊரில் ஒரே ஒருவர் அரசராகவும், மக்களாகவும் இருப்பதை கேட்கும் போது உங்களுக்கு விநோதமாக தோன்றலாம். ஆனால், US-ல் உள்ள மொனொவி என்ற இடத்தில் எல்சி எய்லர் (89) என்ற ஒரு பெண் மட்டுமே வசிக்கிறார். ஒவ்வொரு ஆண்டும் மேயர் தேர்தலில் அவரே போட்டியிட்டு, அவருக்கு அவரே ஓட்டு போட்டு மேயராகிறார். தன்னுடைய வரியையும் வசூல் செய்து, தன்னுடைய ஹோட்டலுக்கு தானே லைசென்ஸும் கொடுக்கிறார்.

error: Content is protected !!