News December 24, 2025

ரேஷன் கார்டுக்கு பொங்கல் பரிசு.. அமைச்சர் அறிவிப்பு

image

<<18653603>>ஜன.6-ம் தேதிக்குள்<<>> பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு வேட்டி, சேலை வழங்கப்படும் என அமைச்சர் காந்தி அறிவித்தார். அதாவது, டிச.15-ம் தேதியே மொத்த வேட்டி, சேலைகளையும் வருவாய்த் துறையினரிடம் ஒப்படைத்து விட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, வேட்டி, சேலை விநியோக பணிகளை அதிகாரிகள் முடுக்கிவிட்டுள்ளனர். பச்சரிசி, வெல்லம் உள்ளிட்ட பொங்கல் தொகுப்பு விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. SHARE IT

Similar News

News January 1, 2026

டாக்டர் ஆலோசனையின்றி இனி COUGH SYRUP வாங்க கூடாது!

image

ம.பி., மற்றும் ராஜஸ்தானில் கோல்ட்ரிஃப் Syrup பாதிப்பால் குழந்தை இறந்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனையடுத்து WHO விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, Syrup தயாரித்தல் மற்றும் விற்பனை செய்வதற்கான விதிகளை மத்திய அரசு கடுமையாக்கியுள்ளது. அதனால், டாக்டரின் ஆலோசனைப்படி மட்டுமே இனிமேல் Syrup-ஐ மெடிக்கலில் வாங்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT.

News January 1, 2026

பொங்கல் கொண்டாடும் அமித்ஷா: கரு.நாகராஜன்

image

பொங்கலுக்கு பின் பாஜகவின் செயல்பாடுகள் வேகமெடுக்கும் என்று பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார். ஜன.4-ம் தேதி தமிழகம் வரும் அமித்ஷா, நயினார் பரப்புரை நிறைவு விழா உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளிலும், அதனைத் தொடர்ந்து ஜன.5-ம் தேதி ஸ்ரீரங்கத்தில் சாமி தரிசனம் செய்துவிட்டு, பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொங்கல் விழாவிலும் அவர் கலந்து கொள்கிறார் எனத் தெரிவித்தார்.

News January 1, 2026

BREAKING: வரலாறு காணாத சரிவு.. மிகப்பெரிய தாக்கம்

image

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, ₹11 பைசா குறைந்து, ₹89.99 என வீழ்ச்சியடைந்துள்ளது. முதலீட்டுச் சந்தையிலிருந்து வெளிநாட்டு நிதி வெளியேற்றம், வர்த்தகம் தொடர்பான நிச்சயமற்ற தன்மையால் ரூபாயின் மதிப்பு குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய பொருள்களின் விலை உயர வாய்ப்புள்ளது.

error: Content is protected !!