News December 25, 2025
ரேஷன் கார்டுகளுக்கு ₹5,000.. அரசு முக்கிய முடிவு

பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ₹5,000 வழங்க வேண்டும் என EPS, நயினார் உள்ளிட்டோர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதனிடையே, நேற்று முன்தினம் CM ஸ்டாலின், அமைச்சர்கள் சக்கரபாணி, பெரியகருப்பன் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். அதில், முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசு அறிவிப்பை CM ஸ்டாலின் விரைவில் அறிவிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News December 25, 2025
அழகே பொறாமைப்படும் ஹிமாலயன் மோனல் PHOTOS

மயில் வண்ணங்களை கொண்ட இந்த பறவையின் பெயர் ஹிமாலயன் மோனல். இமயமலையில் காணப்படும் மோனல், நேபாளத்தின் தேசிய பறவையாக அறியப்படுகிறது. மின்னும் இறகுகளுடன் பிரகாசமாக ஜொலிக்கும் பறவையின் கிரீடம், அதன் அழகுக்கு மேலும் அழகு சேர்க்கிறது. பனிப்பாறைகளில் துள்ளி குதித்து விளையாடும் மோனலின் அழகை ரசிக்க, மேலே உள்ள போட்டோக்களை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்யுங்கள். பிடிச்சிருந்தா Like & SHARE
News December 25, 2025
பயங்கர ஏவுகணையை பரிசோதித்த இந்தியா

அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் K-4 ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அணுசக்தியால் இயங்கும் ஐஎன்எஸ் அரிகாட் நீர்மூழ்கி கப்பலில் இருந்து, 3,500 கி.மீ., தூரம் பயணித்து தாக்கும் இந்த பாலிஸ்டிக் ஏவுகணை (SLBM) சோதனை செய்யப்பட்டுள்ளது. US, சீனா, ரஷ்யா 5,000 கி.மீ., தூரம் சென்று தாக்கும் SLBM-ஐ கொண்டுள்ள நிலையில், இந்தியா அதை நெருங்கி வருகிறது.
News December 25, 2025
ஜெய்ஸ்வால் இதற்கு மேல் வேறு என்ன செய்ய வேண்டும்? திலீப்

அனைத்து ஃபார்மெட்களிலும் சிறப்பான ஃபார்மில் இருக்கும் ஜெய்ஸ்வால் டி20 WC அணியில் சேர்க்கப்படாதது துரதிர்ஷ்டவசமானது என EX இந்திய கேப்டன் திலீப் வெங்சர்கார் தெரிவித்துள்ளார். இது போன்ற வீரரை யாரும் அணியில் இருந்து விலக்கி வைக்க மாட்டார்கள், அவர் அணியில் சேர இதற்கு மேல் வேறு என்ன செய்ய வேண்டும்? இது போன்ற புறக்கணிப்புக்கள் வீரர்களின் தன்னம்பிக்கையை உடைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


