News March 25, 2025

ரேஷன் கார்டில் கைரேகை வைக்கலயா?

image

AAY மற்றும் PHH குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் கைரேகையை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யாதவர்கள் வரும் 31ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் அட்டையை இழக்க நேரிடும் என்றும் அண்மையில் எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஒருவேளை நீங்கள் வெளி மாவட்டத்திலோ, வெளி மாநிலத்திலோ இருந்தால் அருகில் உள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று அங்கு ரேகையை பதிவு செய்து கொள்ளலாம். ஷேர் செய்யுங்கள்.

Similar News

News March 28, 2025

ஆயிரம் விளக்கு பகுதியில் நல்ல திட்ட உதவிகள்

image

முதல்வர் ஸ்டாலினின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, சென்னை மேற்கு மாவட்டம், ஆயிரம் விளக்கு கிழக்கு பகுதி திமுக, 117வது வட்ட செயலாளர் எஸ்.சத்திய பெருமாள் ஏற்பாட்டில், தாமஸ் சாலை அருகில் நடைபெற்ற பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில் பங்கேற்று சிறப்புரையாற்றி, அப்பகுதி மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் சிற்றரசு.

News March 28, 2025

சென்னையில் இன்றைய இரவு காவலர்கள் விவரம்

image

சென்னையில் இன்று (27.03.2025) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள கவலைகளை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News March 28, 2025

சென்னை கோயம்பேட்டில் பிரேமலதா விஜயகாந்தை சந்தித்த ரவீந்திரன் துரைசாமி

image

சென்னை கோயம்பேட்டில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தை அரசியல் விமர்சகர் திரு ரவீந்திரன் துரைசாமி மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து பேசினார். இருவருக்கிடையில் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் முக்கிய கவனத்தை பெற்றுள்ளது. தற்போதைய அரசியல் நிலைமைகள், எதிர்கால கூட்டணிகள் உள்ளிட்ட பல முக்கிய விஷயங்கள் குறித்து இருவரும் ஆலோசித்திருக்கலாம் என கூறப்படுகிறது.

error: Content is protected !!