News March 31, 2025
ரேஷன் கார்டில் கைரேகை வைக்கலயா?

பெரம்பலூர் மாவட்டத்தில் AAY மற்றும் PHH குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் கைரேகையை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யாதவர்கள் இன்றைக்குள் (மார்ச்.31) பதிவு செய்ய வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் அட்டையை இழக்க நேரிடும். ஒருவேளை நீங்கள் வெளி மாவட்டத்திலோ, வெளி மாநிலத்திலோ இருந்தால் அருகில் உள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று அங்கு ரேகையை பதிவு செய்து கொள்ளலாம். (உடனே SHARE பண்ணுங்க)
Similar News
News February 18, 2026
பெரம்பலூர்: தனிப்படை போலீசாரின் அதிரடி நடவடிக்கை

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, மருதடி கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன் (30). இவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து அப்பகுதியில் தனிப்படை போலீசார் சோதனை செய்தனர். இதில் 17 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து சரவணனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
News February 18, 2026
பெரம்பலூர்: மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

மின்வாரிய ஊழியர்களுக்கு, பொறியாளர்களுக்கு, அலுவலர்களுக்கு 1.12.2023 முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வை உடனடியாக வழங்கிட கோரியும், காலம் தாழ்த்துவதை கைவிட கோரியும் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு- CITU பெரம்பலூர் வட்டக் கிளை சார்பாக பெரம்பலூர் உபகோட்ட அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திருச்சி மண்டல செயலாளர் எஸ்.அகஸ்டின், சதீஷ், தினேஷ், தீபன் ஆகியோர்கள் கலந்துகொண்டனர்.
News February 17, 2026
பெரம்பலூர்: உங்க குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 வேண்டுமா?

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும், பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!


