News March 31, 2025
ரேஷன் கார்டில் கைரேகை வைக்கலயா?

AAY மற்றும் PHH குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் கைரேகையை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யாதவர்கள் இன்றைக்குள் (மார்.31) பதிவு செய்ய வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் அட்டையை இழக்க நேரிடும் என்றும் அண்மையில் எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஒருவேளை நீங்கள் வெளி மாவட்டத்திலோ, வெளி மாநிலத்திலோ இருந்தால் அருகில் உள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று அங்கு ரேகையை பதிவு செய்து கொள்ளலாம். ஷேர் செய்யுங்கள்.
Similar News
News August 25, 2025
பூந்தமல்லி: குறைகளை சொல்ல ஸ்கேன் பண்ணுங்க

திருவள்ளூர் எம்.பி., சசிகாந்த் செந்தில் மக்கள் தங்கள் பகுதி குறைகளை தெரிவிக்க QR கோடு அறிமுகம் செய்துள்ளார். இதை ஸ்கேன் செய்தால், ‘நம்ம ஊரில்; நம்ம எம்.பி.,’ என்ற பக்கத்திற்கு செல்கிறது. அங்கு மக்கள் தங்கள் புகார்களை பதிவு செய்யலாம் என கூறப்பட்டுள்ளது. இதை மக்களிடம் கொண்டு செல்ல தற்போது தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில், போஸ்டர் ஒட்டியும், சமூக வலைதளங்களில் பதிவேற்றியும் வருகின்றனர்.
News August 25, 2025
திருத்தணியில் குவிந்த பக்தர்கள்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள புகழ்பெற்ற திருத்தணி முருகன் கோயிலில் நேற்று வார விடுமுறை என்பதால், பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா போன்ற அதிகளவில் பக்தர்கள் வந்திருந்து வரிசையில் 2 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். மூலவருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
News August 24, 2025
திருவள்ளூரில் இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்!

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 24) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.