News January 12, 2026

ரேஷன் கடை திறக்காததால் மக்கள் அவதி!

image

தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணிகள் தமிழ்நாடு முழுவதும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று, கள்ளக்குறிச்சியில் அமைந்துள்ள நம்பர் 6 ரேஷன் கடை திறக்கப்படாமல் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், காலை முதலே மழையை பொருட்படுத்தாமல் வந்த மக்கள், நீண்ட நேரம் காத்திருந்து அவதிக்குள்ளாகியுள்ளனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Similar News

News January 26, 2026

கள்ளக்குறிச்சியில் விவசாயிக்கு நேர்ந்த கொடூரம்!

image

தியாகதுருகம் அருகே உடையனாச்சி கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் தனது விவசாய நிலத்தில் புதிதாக வீடு கட்டி உள்ளார். இந்த வீட்டிற்கு மின் இணைப்பு பெறவில்லை என்பதால் அருகே இருந்த மின்கம்பத்தில் இருந்து மின்சாரம் பெற முயன்றுள்ளார். அப்போது ரமேஷ் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே ரமேஷ் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வரஞ்சரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 26, 2026

கள்ளக்குறிச்சியில் லஞ்சம் கேட்டால் உடனே CALL!

image

அரசுத்துறைகளில் லஞ்சம் தொடர்பான புகார்களை தெரிவிக்க 044-22321090 (மாநில கண்ட்ரோல் அறை), 044-22321090 (வடக்கு மண்டல எஸ்.பி) எண்களை பயன்படுத்தி கொள்ளலாம். கள்ளக்குறிச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்தை ( 04151-294600) தொடர்பு கொள்ளலாம். புகார் தெரிவிப்பவர்களின் விபரங்கள் ரகசியம் காக்கப்படும். அச்சம் தவிர்த்து லஞ்சம் தொடர்பான புகார்களை தைரியமா சொல்லுங்க. ஷேர் பண்ணுங்க.

News January 26, 2026

கள்ளக்குறிச்சி: GH-ல் இவை எல்லாம் இலவசம்!

image

அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் இலவச சேவைகள்

1. இலவச மருத்துவ பரிசோதனை

2. அவசர சிகிச்சை

3. மருந்துகள்

4. இரத்தம், எக்ஸ்-ரே, பரிசோதனை சேவைகள்

5. கர்ப்பிணி பெண்களுக்கு இலவச பிரசவம்
6. குழந்தை தடுப்பூசி
7. 108 அவசர அம்புலன்ஸ்
இதில் ஏதும் குறைகள் (அ) லஞ்சம் போன்ற புகார்கள் இருந்தால் கள்ளக்குறிச்சி மாவட்ட சுகாதார அதிகாரியிடம் 04151-222190 தெரிவியுங்க. இந்த பயனுள்ள தகவலை ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!