News August 4, 2024
ரேஷன் கடையில் பருப்பு, பாமாயில் இந்த மாதம் வழங்கப்படும்

ஜூலை மாதத்தில் துவரம் பருப்பு, பாமாயில் பெற முடியாத ரேஷன் அட்டை தாரர்கள், இம்மாதம் பெறலாம். ஜூன் மாதம் துவரம் பருப்பு, பாமாயில் பெற இயலாதவர்கள், ஜூலை மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இதனால், ஜூலை மாதத்துக்கான துவரம் பருப்பு, பாமாயிலை சிலரால் பெற முடியவில்லை. எனவே, தேனியில் உள்ள 4,25,919 அட்டை தாரர்களில் ஜூலை மாதத்துக்கான பொருட்களை பெற இயலாதவர்கள் இம்மாதம் பெறலாம்.
Similar News
News October 21, 2025
தேனியில் 12 ஆண்டுக்கு பிறகு கைது

தேனி கோடாங்கிபட்டியை சேர்ந்த அழகுராஜா. இவரது மனைவி செல்வலட்சுமி ஆகியோர் 2013.ல் ஏற்பட்ட விபத்தில் பலியாகினர். இந்த வழக்கில் கேரளாவை சேர்ந்த சதீஷ் என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் சதீஷ் 12 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தார். நீதிமன்ற உத்தரவில் தேனி போலீசார் சதீஷை நேற்று (அக்.20) கைது செய்தனர்.
News October 21, 2025
தேனியில் மின் நிலையத்தில் புகுந்த மழை நீர்

கம்பம் அருகே சிறு புனல் நீர்மின் நிலையம் என அழைக்கப்படும் மைக்ரோ பவர் ஹவுஸ்ற்குள் கடந்த 2 தினங்களாக பெய்த கனமழையால் ஏற்பட்ட மழை வெள்ள நீர் புகுந்தது. மழை நீர் உள்ளே புகுந்ததால் ஒட்டுமொத்த மின் நிலையத்தின் இயந்திரங்கள் தண்ணீரில் மூழ்கின. இரண்டு ஊழியர்கள் தப்பி ஓடி உயிர் பிழைத்தனர். சேதமதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
News October 20, 2025
தேனி: ரூ.1,50,000 மதிப்பிலான பன்றிகள் திருட்டு.!

கண்டமனூர் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல். இவர் அப்பகுதியில் பன்றி பண்ணை வைத்து நடத்தி வரக்கூடிய நிலையில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பண்ணையில் இருந்த ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் மதிப்பிலான ஏழு பன்றிகளை சிலர் திருடி சென்றது தெரியவந்தது. இந்த திருட்டு சம்பவம் குறித்து கண்டமனூர் போலீசார் நேற்று (அக்.19) வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.