News October 28, 2024
ரேஷன் கடைகளுக்கு நவ.16ஆம் தேதி விடுமுறை

தீபாவளி பண்டிகையையொட்டி அக்.27ம் தேதி ரேஷன் கடைகள் செயல்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்தது. அதன்படி, நேற்று அரிசி உள்பட அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைப்பதற்கு ஏதுவாக இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சந்திரகலா கூறியிருந்தார். இந்நிலையில், இந்த விடுமுறை நாளில் பணியாற்றுவதற்கு நவ.16ஆம் தேதி அன்று ரேஷன் கடைகளுக்கு விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News February 12, 2026
ராணிப்பேட்டையில் மோசடி; வெளியான பகீர் பின்னணி!

திமிரியில் ரூ.100 கொடுத்தால் மருத்துவ காப்பீடு தருவதாக கூறி 5 பேர் மோசடியில் ஈடுபட்டனர். இது குறித்து கலவை போலீஸ் நடத்திய விசாரணையில் இவர்கள் திருவனந்தபுரத்தை சேர்ந்த சுராஜ் (27), மேல்விஷாரத்தை சேர்ந்த தமிழ்பாரதி (23), தூத்துக்குடியை சேர்ந்சண்முகவேணி (37) என்றும் கலவையில் ஒரு வீட்டில் அட்டைகளை print out எடுத்ததும் தெரிய வந்தது. போலீசார் மூவரையும் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
News February 12, 2026
ராணிப்பேட்டை: மாணவனை வெளுத்து வாங்கிய ஆசிரியர்!

அரக்கோணம் அடுத்த நாகவேடு அரசு பள்ளியில், கடந்த10-ம் தேதி ஆசிரியர் ஒருவர் பள்ளி வளாகத்தில் உள்ள கழிவறைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த +2 மாணவர்கள் கண்டித்துள்ளார். இதில் மாணவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட கோபமடைந்த ஆசிரியர் ஒரு மாணவனை அடித்துள்ளார். இதுகுறித்து மாணவனின் பெற்றோர் பள்ளி தலைமை ஆசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு அரக்கோணம் தாலுகா போலீசில் புகார் அளித்துள்ளனர்.
News February 12, 2026
ராணிப்பேட்டையில் துடிதுடித்து பலி!

அரக்கோணத்தை பிரியாணி மாஸ்டர் ஜாகீர் (55). இவர் கடந்த 7-ந் காலை அரக்கோணம் வின்டர்பேட்டை டி.பி.ரோடு பகுதியில் பைக்கில் சென்றபோது நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதில் படுகாயம் அடைந்து அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஜாகிர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று (பிப்.11) சிகிச்சை பலனின்றி ஜாகீர் பரிதாபமாக உயிரிழந்தார்.


