News December 23, 2025
‘ரேஷன் கடைகளில் மலிவு விலையில் தங்கம் விற்பனை’

ரேஷன் கடைகளில் தங்கம், வெள்ளி நகைகளை மலிவு விலையில் விற்குமாறு ஏழை, எளியோர், நடுத்தர மக்கள் நலச் சங்க தலைவர் லிங்கபெருமாள் வலியுறுத்தியுள்ளார். CM தனிப்பிரிவில் அவர் அளித்துள்ள மனுவில், விலை உயர்வால் கல்லூரி செல்லும் ஏழை மாணவிகள் சிறிதளவு நகை கூட அணிய முடியாத நிலை உள்ளது. இதனால், கூட்டுறவு வங்கி, ரேஷன் கடையில் மலிவு விலையில் தங்கம், வெள்ளி நகைகளை விற்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News December 27, 2025
ஹெச் வினோத் என்ன பேசப் போகிறார்?

ஜனநாயகன் பட ரிலீஸுக்கு இன்னும் 13 நாள்களே உள்ளன. படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் இன்று பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இந்நிலையில் விஜய்யின் கடைசி பட இயக்குநரான ஹெச் வினோத், மேடையில் விஜய், ஜனநாயகன் குறித்து என்ன பேசப் போகிறார் என்பதும் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. தனியார் விருதுவிழா மேடை தவிர வினோத் இதுவரை ஜனநாயகன் குறித்து எங்கேயும் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
News December 27, 2025
வடமாநில தொழிலாளர்களுக்கு அனுமதிச்சீட்டு: NTK தீர்மானம்!

நாம் தமிழர் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. சென்னை திருவேற்காட்டில் இன்று சீமான் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு, பஞ்சமி நிலங்கள் மீட்பு, SIR-க்கு எதிர்ப்பு, வடமாநில தொழிலாளர்களுக்கு உள் நுழைவு அனுமதிச்சீட்டு தேவை, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் என குறிப்பிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் கவனம் பெற்றுள்ளன.
News December 27, 2025
இந்தியாவில் போலி ரேபிஸ் தடுப்பூசியா?

இந்தியாவில் ரேபிஸ் நோய்த் தடுப்புக்காக ‘Abhayrab’ தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசியின் போலி தொகுப்புகள் புழக்கத்தில் உள்ளதாக ஆஸ்திரேலிய சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த 2023, நவ.1-ம் தேதி முதல் இந்த தடுப்பூசியை போட்டுக் கொண்டவர்கள், ஆஸி.,-யில் பதிவு செய்யப்பட்ட மாற்று தடுப்பூசியை போட்டுக்கொள்ளவும் அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.


