News March 21, 2024
ரேஷன் அரிசி கடத்திய 5 பேர் கைது

விக்கிரவாண்டி, குண்டலிப்புலியூரில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக வந்த புகாரையடுத்து கெடார் போலீசார் நேற்று (மார்ச் 20) அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு சத்தியமூர்த்தி, கணேஷ், கார்த்திக், பாலு, மணிகண்டன் ஆகிய 5 பேர் பொதுமக்களிடமிருந்து குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி வெளிமார்க்கெட்டில் அதிக விலைக்கு விற்பனை செய்வது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் 5 பேரையும் கைது செய்தனர்.
Similar News
News April 16, 2025
அமைதி தரும் மரக்காணம் கடற்கரை

விடுமுறை தினத்தில் வெளியில் சென்று வர அருகிலேயே சிறந்த சுற்றுலா தலமாக மரக்காணம் கடற்கரை உள்ளது. கீழக்கு கடைகரையோரம் அமைந்துள்ள இந்த பகுதியின் அமைதியான சூழல் மனதுக்கு அமைதி தரும். அமைதியை விரும்புவோர் நிச்சயம் சென்று வரலாம். இங்குள்ள உப்புத் துறை இந்த கடற்கரையின் மிகவும் பிரபலமான ஒன்றாகும். இப்பவே உங்க நண்பருக்கு ஷேர் பண்ணி ட்ரிப்க்கு பிளான் பண்ணுங்க
News April 16, 2025
மேல்மலையனுார் கோயிலில் காணிக்கை வசூல்

மேல்மலையனுார் அங்காளம்மன் கோயில் உண்டியல் எண்ணும் பணி நேற்று ஏப்.15 காலை துவங்கியது. இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சக்திவேல், துணை ஆணையர் சிவலிங்கம், அறங்காவலர் குழு தலைவர் மதியழகன் முன்னிலையில் கோவில் ஊழியர்கள், தன்னார்வலர்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில் ரூ.73 லட்சத்து 61 ஆயிரத்து 483 ரொக்கம் ,190 கிராம் தங்கம், 902 கிராம் வெள்ளியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.
News April 16, 2025
விழுப்புரத்தில் மதியம் 2.30 மணி வரை மழை தொடரும்

விழுப்புரம் மாவட்டம் மற்றும் விழுப்புரம் சுற்றியுள்ள ஒன்றியங்கள் கானை, விக்கிரவாண்டி, மைலம், வானூர், திண்டிவனம், செஞ்சி, மேல்மலையனூர், கண்டமங்கலம், மரக்காணம் ஆகிய ஒன்றியங்களில் இன்று மதியம் 2.30.மணி வரை மழை தொடர வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் பல்வேறு இடங்களில் மழை பெய்து கொண்டு வரும் நிலையில் தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்