News July 28, 2024
ரேஷன் அரிசி கடத்தலா ? புகார் எண்கள் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கல் சம்பந்தமான புகார்களை தெரிவிக்க எண்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறைக்கு 1800 599 5950 சென்று கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். மேலும், திருப்பூர் மாவட்ட காவல் ஆய்வாளர் 94981 04500, ஆய்வாளர் 94981 26706 என்ற எண்களின் தொடர்பு கொள்ள அறிவிக்கபட்டுள்ளது.
Similar News
News August 18, 2025
புகையிலை பொருட்கள் வைத்திருந்தவர் கைது

திருப்பூர் வடக்கு போலீசார் ரயில் நிலையம் அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்றவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த முகமது சமீர் அலாம்(34) என்பதும், அவரிடம் 2 கிலோ புகையிலை பொருட்கள் இருப்பதும் தெரிய வந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த வடக்கு போலீசார் அவரை கைது செய்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
News August 17, 2025
திருப்பூர் இரவு ரோந்து காவலர்கள் விபரம்

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 17.08.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். காங்கேயம், தாராபுரம், உடுமலை, அவினாசி, பல்லடம் ஆகிய பகுதியில் உள்ள காவல்துறையின் இரவு ரோந்து பணி விபரம் மாவட்ட காவல்துறையினரால் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவிக்கு 108ஐ அழைக்கவும்.
News August 17, 2025
திருப்பூர்:ரேஷன் கார்டில் பிரச்சனையா.. இத பண்ணுங்க!

திருப்பூர் மக்களே, உங்கள் ரேஷன் கார்டில் பெயர் மாற்றம், நீக்கம், சேர்ப்பு, பிழை திருத்தம் போன்ற பிரச்சனைகளுக்கும், ரேஷன் பொருட்களின் தரம், புகார், சேவைகளில் மாற்றம் குறித்த புகார்களை தெரிவிப்பதற்கும், தகவல்கள் அப்டேட் ஆகாதது போன்ற எந்தவொரு ரேஷன் கார்டு சம்பந்தமான சேவைக்கும், நீங்கள் 04428592828 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு SHARE பண்ணுங்க!